திடீரென மசூதிக்கு சென்ற ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத்.. வரவேற்ற இஸ்லாமியர்கள்.. டெல்லியில் என்ன நடந்தது?
டெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு வருகை தந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அங்கு பல்வேறு முஸ்லிம் தலைவர்களை மோகன் பாகவத் சந்தித்ததாகவும், பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மசூதி விவகாரம், ஹிஜாப் பிரச்சினை என்பன உள்ளிட்ட பல விஷயங்களில் இந்து - முஸ்லிம் மதத்தினர் இடையே ஒருவிதமான இறுக்கமான சூழல் நிலவி வரும் நிலையில், மோகன் பாகவத்தின் இந்த சந்திப்பு முககியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஞானவாபி மசூதி சர்ச்சை
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கு தங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும் இந்து பெண்கள் சிலர் நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரம் இஸ்லாமியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிவலிங்கம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் சிலர் வலியுறுத்தி வந்தனர்.

மோகன் பாகவத் கருத்தால் அமைதி
அந்த சமயத்தில்தான், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்தார். அதாவது, ஞானவாபி மசூதி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல என்றும், அதற்கு இப்போது இருக்கும் முஸ்லிம்களோ, இந்துக்களோ காரணம் கிடையாது எனவும் அவர் கூறினார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிவலிங்கம் இருக்கிறதா என தேடி புதிய புதிய சர்ச்சைகளை உருவாக்க தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

மோகன் பாகவத்துக்கு அழைப்பு
மோகன் பாவத்தின் இந்தக் கருத்தை முஸ்லிம் மக்களும், மதத் தலைவர்களும் வெகுவாக பாராட்டினர். மேலும், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் சில முஸ்லிம் மதத் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதன்பேரில், சில முக்கிய முஸ்லிம் மதத் தலைவர்களை மோகன் பாகவத் சந்தித்து வருகிறார். இதில் பல முக்கிய பிரச்சினைகளை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மசூதிக்கு வருகை
அந்த வகையில், டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வருகை தந்தார். பின்னர், அங்கு அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை மதகுரு உமர் அகமத் இலியாஸியை அவர் சந்தித்து பேசினார். முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, டெல்லி முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பத்திரிகையாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடைக்கவில்லை.

என்ன பேசினார்கள்?
இந்நிலையில், கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் நிலவி வரும் மதநல்லிணக்கமற்ற சூழல் குறித்து மிகவும் கவலைப்படுவதாக மோகன் பாகவத் கூறினார். மேலும், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இரண்டு முக்கியமான பிரச்சினையை மோகன் பாகவத் முன்வைத்தார். அதில் முதலாவது பசுவதை. பசுவதை விவகாரம் இந்துக்களை மிகவும் புண்படுத்துவதாக அவர் கூறினார். அதற்கு நாங்கள், நாடு முழுவதும் பசுவதை தடை செய்யப்பட்டிருப்பதாகவும், எந்த முஸ்லிமும் அதை மீறுவதில்லை என்றும் கூறினோம்.

புண்படுத்தும்'கஃபீர்'
பின்னர், இந்துக்களை 'கஃபீர்' என சில முஸ்லிம்கள் கூறுவதை நிறுத்த வேண்டும் என மோகன் பாகவத் வலியுறுத்தினார். இதற்கு நாங்கள் தெளிவாக பதிலளித்தோம். அதாவது, 'கஃபீர்' என்பது அரபிக் மொழியில் 'இஸ்லாத்தில் நம்பிக்கை இல்லாதோர்' என அர்த்தம். ஆனால் இப்போது அது ஏதோ தவறான வார்த்தையாக பார்க்கப்படுகிறது. இந்துக்கள் மனதை புண்படுத்தினால் இனி அந்த வார்த்தை பிரயோகத்தை நிறுத்துவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை" என நாங்கள் தெரிவித்தோம்.
அதேபோல, சில வலதுசாரி அமைப்பினர் முஸ்லிம்களை ஜிகாதி என்றும், பாகிஸ்தானி எனவும் கூறுவதை பற்றி கவலை தெரிவித்தோம். அதற்கு பதிலளித்த மோகன் பாகவத், "முஸ்லிம்களும் இந்தியர்கள்தான். இனி இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட மாட்டாது" என உறுதியளித்தார். இவ்வாறு எஸ்.ஒய். குரேஷி செய்தியாளர்களிடம் கூறினார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications