'40,000 ஆண்டுகளாக இந்தியர்களின் டிஎன்ஏ ஒரே மாதிரிதான்'.. சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
டெல்லி: நாட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2014-ம் ஆண்டு பிறகு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. இதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டிலும் அமோக வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
பாஜக ஆட்சியில் இருக்கும்போது எல்லாம் ''மத்திய அரசை வழிநடத்துவதே ஆர்.எஸ்.எஸ்.தான். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தைத்தான் மத்திய பாஜக அரசு கடைபிடிக்கும்'' என்று கூறுவது வழக்கமாகி விட்டது. கடந்த பல ஆண்டுகலாகவே இப்படி கூறப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்
இந்த நிலையில் இந்த கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோகன் பகவத் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து பேசினார். இதன் பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-

ரிமோட் கண்ட்ரோல்
ஊடகங்கள் எங்களை மத்திய அரசின் 'ரிமோட் கண்ட்ரோல்' என்று குறிப்பிடுகின்றன. ஆனால் அது முற்றிலும் பொய்யானது. ஆனாலும் எங்கள் ஊழியர்களில் சிலர் நிச்சயமாக அரசின் அங்கத்தினர்தான். எங்களின் சேவகர்களுக்கு அரசாங்கம் எந்த விதமான உத்தரவாதத்தையும் வழங்குவதில்லை. அரசிடம் இருந்து எங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில் என்னவென்றால், நமக்குச் சொந்தமானதைக் கூட இழக்க நேரிடலாம் என்பதுதான் என்று மோகன் பகவத் கூறினார்.

இந்திய நடைமுறை
மருத்துவத்தில் பழங்கால இந்திய நடைமுறைகளை எடுத்துரைத்த அவர், ''கதா, குவாத் (மூலிகை சூத்திரங்கள்) போன்ற நமது பாரம்பரிய வைத்தியங்கள் மூலம் நம்மை பாதுகாத்தோம். இப்போது, உலகம் இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்திய மாதிரியைப் பின்பற்ற விரும்புகிறது. நமது நாடு உலக வல்லரசாக மாறாமல் போகலாம்,. ஆனால் நிச்சயமாக உலக குருவாக முடியும் என்று தெரிவித்தார்.

இந்தியர்களின் மரபணு
மேலும் ,சட்டசமேதை டாக்டர் அம்பேத்கர் வார்த்தையை மேற்கோள் காட்டி பேசிய மோகன் பகவத், ' நாம் ஒருபோதும் யாருடைய பலத்தினாலும் தோற்கடிக்கப்படுவதில்லை, ஆனால் நம்முடைய சொந்த பலவீனங்களால் தோற்கடிக்கப்படுகிறோம்' இந்தியர்களின் மரபணு 40000 ஆண்டுகளாக ஒன்று தான். நமது மூதாதையர்கள் ஒரே குலத்தவரே. அந்த மூதாதையர்களால் தான் நாடு வளம் பெற்றது' என்றும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications