ஆர்எஸ்எஸ்-இடம் “சரண்டர்” ஆன பாஜக.. 3 மாநிலங்களின் புதிய முதலமைச்சர்கள்.. ஒரே தொடர்பு என்ன தெரியுமா?
டெல்லி: 3 மாநிலங்களில் முதலமைச்சர்களாக பாஜக அறிவித்து உள்ள 3 பேருக்கும் உள்ள ஒரே தொடர்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பாக உள்ளது. இந்த மூன்று பேர் யார்? தீவிர ஆர்.எஸ்.எஸ். அபிமானிகளை முதலமைச்சராக பாஜக தேர்வு செய்ததன் பின்னணி என்ன என்று அலசுவோம்.
பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களில் நீண்ட இழுபறிக்கு பிறகு முதலமைச்சர்கள் யார் என்று பாஜக தலைமை அறிவித்து உள்ளது. பஜன்லால் சர்மா ராஜஸ்தானின் முதலமைச்சராகவும், மோகன் யாதவ் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், விஷ்ணு தேவ் சாய் சத்தீஸ்கரின் முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் 3 பேருமே முதலமைச்சர் ஆவார்கள் என்று அவர்களுக்கு கூட தெரிந்து இருக்காது. யாருமே இவர்களை பற்றி பேசவில்லை. ஸ்டார் வேட்பாளர்கள் பட்டியலில் கூட இல்லாமல் இருந்தனர்.

தற்போது 3 பேரும் முதல் முறை முதலமைச்சர்களாக அறிவிக்கப்பட உள்ளார்கள். இந்த அறிவிப்பின் மூலம் பாஜக தனது உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் நிலவிய கணிப்புகளையும் தகர்க்கும் வகையில் அமைந்து உள்ளது. விரைவில் மூவரும் முதல்முறையாக முதலமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர். இவர்களில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர், மத்திய பிரதேச முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்தவர், ராஜஸ்தான் முதலமைச்சர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் மூவருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளது.
அது பாஜக என்று மட்டும் நினைத்துவிடார்கள். அதையும் தாண்டி பாஜகவின் சித்தாந்த அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்) இயக்கத்தால் வளர்க்கப்பட்டவர்கள் இவர்கள். மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவராவார். மோகன் யாதவ் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, ஆர்.எஸ்.எஸ்.-ன் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாநிலத்திலுள்ள அமைப்பின் தொடர்கள் இதனை வரவேற்று கொண்டாடினர். மோகன் யாதவ் ஏபிவிபியின் தேசிய செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்.
அதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய்க்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.. அவர் சத்தீஸ்கரின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, அம்மாநில ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றார். ஆர்.எஸ்.எஸ். மீதான அவரது கருத்தியல் ஈடுபாடு மிகவும் தீவிரமானது என்று அம்மாநில மக்கள் கூறுகிறார்கள். சத்தீஸ்கரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கமாகவே சாய் பார்க்கப்படுகிறது.
சாய் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தனது பழங்குடியின மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் கர் வாப்ஸி திட்டத்தை கையில் எடுத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைமையின் நம்பிக்கையை பெற்றவர். மதமாற்றத்தைத் தடுக்க, சத்தீஸ்கரில் மதமாற்ற தடை சட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது. ஆனால் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங் அரசு வளர்ச்சியை மட்டுமே தேர்தல் உத்தியாகக் கருதி அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே அவர் இம்முறை ஓரம்கட்டப்பட்டு உள்ளார்.
அதேபோன்று ராஜஸ்தான் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ள முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மாவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் வலுவான தொடர்பு உள்ளது. அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவிபிவியின் முக்கிய தலைவராக இருந்தவர். அதன் மூலம் கிடைத்த பிரபல்யத்தால் பாஜகவில் எம்.எல்.ஏ. சீட் அவருக்கு கிடைத்தது. ஓபிஎஸிக்கு எதிரான கட்சி பாஜக என்ற ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை முறியடிக்க ஆர்.எஸ்.எஸ். கொள்கைவாதியான யாதவை முதலமைச்சராக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். சொன்னதை கேட்டு தட்டாமல் அதை செய்திருக்கிறது பாஜக.
கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே லேசான உரசல்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்புடன் செயலாற்றி வரும் பாஜக தலைமை, 3 மாநில தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் சரணாகதி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications