கதை முடிந்துவிட்டது.. பாஜகவை ஆர்எஸ்எஸ்ஸே கைவிட்டுவிட்டது.. நிலவரத்தை போட்டுடைத்த மாயாவதி!
ஆர்எஸ்எஸ் அமைப்பே பாஜகவை கைவிட்டுவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பே பாஜகவை கைவிட்டுவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தலின்படி பாஜக கட்சி சில முக்கிய விஷயங்களால் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது. அதில் முதல் விஷயம் ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் பலர் பாஜகவிற்காக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆர்எஸ்எஸ் பாஜக உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வருகிறது. தற்போது இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

மாயாவதி பேட்டி
மாயாவதி தனது பேட்டியில், இப்போதெல்லாம் வேட்பாளர்கள் கோவிலுக்கு செல்வது பெரிய பேஷன் ஆகிவிட்டது. தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் இப்படித்தான் செய்வார்கள். இதை தேர்தல் ஆணையம் முதலில் தடை செய்ய வேண்டும். இது விதிக்கு முரணானது.

என்ன சொன்னார்
பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. அவர் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டது. மோடி தோற்க போகிறார் என்பது பாஜகவிற்கே தெரிந்துவிட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் மோடி தோற்க போவது தெரிந்துவிட்டது.

மோடி பேட்டி
அதனால்தான் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் யாரும் பாஜகவிற்காக வேலை பார்க்கவில்லை. எப்போதும் தேர்தல் பார்க்கும் ஆர்எஸ்எஸ் இந்த முறை அப்படி செய்யவில்லை. ஆர்எஸ்எஸ் பாஜகவை கைவிட்டுவிட்டது. தேர்தல் முடிவைத்தான் இது காட்டுகிறது.

எப்படி இருக்கும்
மோடி இதனால் அச்சத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் முடிவுகள் தெரிந்துவிடும். ஒரு பிரதமர் என்பவர் இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும். மோடி அதில் எப்போதோ தவறிவிட்டார், என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications