"உக்ரைனில் உள்ள இந்தியர்களை.. பாதுகாப்பாக வெளியேற்ற இதை செய்யலாம்.." ரஷ்யா முக்கிய தகவல்
டெல்லி: உக்ரைன் நாட்டில் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் மரணம் குறித்து ரஷ்யா சார்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் அலிபோவ் தெரிவித்துள்ளார்
Recommended Video
உக்ரைன் நாட்டில் ஒரு வாரத்திற்கும் மேலாகப் போர் தொடர்ந்து நீட்டித்து வருகின்றது. இந்நிலையில், சமீபத்தில் கார்கிவ் நகரில் இருந்த இந்திய மாணவர் ஒருவர் ரஷ்ய ராணுவம் சுட்டதில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் அலிபோவ், "கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் இருக்கும் இந்தியர்கள் வெளியேறும் வகையில் ராணுவ நடவடிக்கை இல்லாத சிறப்பு வழித்தடத்தை (humanitarian corridor) உருவாக்குவது தொடர்பாகப் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் கார்கிவில் இந்திய மருத்துவ மாணவர் மரணம் குறித்து ரஷ்யா சார்பில் தீவிர விசாரணை நடத்தப்படும்,

உக்ரைன் விவகாரத்தில் நடுநிலையான நிலைப்பாடு எடுத்ததற்கு இந்தியாவுக்கு நன்றி கூறுகிறோம். இந்த நெருக்கடியின் ஆழத்தையும் அதன் சிக்கலான தன்மையையும் இந்தியா புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு தொடரும் என நம்புகிறோம்.
மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் போதிலும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இந்தியாவுடன் தொடர்ந்து வணிகம் செய்யவே விரும்புகிறோம். இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். S400 உள்ளிட்ட இந்தியாவுடன் நாங்கல் மேற்கொண்டுள்ள ராணுவத் தளவாடங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் இதனால் பாதிக்கப்படாது" என்றும் அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications