'ஸ்புட்னிக் 5' கொரோனா தடுப்பூசி உற்பத்தி.. இந்திய ஒத்துழைப்பை கேட்கும் ரஷ்யா
டெல்லி: கொரோனா தடுப்பூசி தொடர்பான ஒரு முக்கிய திருப்பமாக, ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் 5' தடுப்பூசி தயாரிப்பில் ஒத்துழைக்குமாறு இந்திய அரசை ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.
Recommended Video
ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஸ்புட்னிக் 5என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. தற்போது கட்டம் 3 மருத்துவ பரிசோதனையில் தடுப்பூசி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆனால், 2வது கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததுமே, ரஷியா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 11ம் தேதி அறிவித்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தகவல் பரிமாற்றம்
இந்த நிலையில் இந்த தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா நாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "ஸ்புட்னிக் 5 தடுப்பூசியைப் பொருத்தவரை, இந்தியாவும் ரஷ்யாவும் தகவல் பகிர்வுகளில் ஈடுபட்டுள்ளன. சில ஆரம்ப கட்ட தகவல்கள் பகிரப்பட்டுள்ளன, சில விரிவான தகவல்களுக்கு காத்திருக்கிறோம்" என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஸ்புட்னிக் 5, தடுப்பூசி தயாரிப்பதற்கான முறையான கோரிக்கையை ரஷ்யா முன்வைத்துள்ளதாம்.

நாடிய தூதர்
"முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜயராகவனையும், உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறை செயலாளர்களையும் ரஷிய தூதர் நிகோலே குதாசேவ் நாடி உள்ளார். " என்று ஒரு அரசு அதிகாரி கூறினார்.

தன்னார்வலர்கள்
"45 மருத்துவ மையங்களில் 40,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ரஷ்யாவில் ஸ்பூட்னிக் 5 தடுப்பூசியின் செயல்திறன், நோயெதிர்ப்புத் திறன் மற்றும் பாதுகாப்பு பற்றிய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்." என்று ரஷ்ய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனைகள்
இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மருத்துவ அமைப்புகள் அதிகம். எனவே, மருத்துவ பரிசோதனைகள் மட்டுமின்றி, 3வது கட்ட மருத்துவ டிரையல் பரிசோதனையை இந்தியாவில் நடத்தவும் ரஷ்யா கேட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications