தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா மரணங்கள்- ரஷ்யாவில் ஒரே நாளில் 822 பேர் பலி
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. கொரோனா மரணங்கள் உலக நாடுகளை மிகவும் மோசமாக அச்சுறுத்தி வருகின்றன. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 822 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
உலக நாடுகள் முழுவதும் பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,22,45,591. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,56,476.,
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20,88,52,834. உலக நாடுகளின் மொத்த ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,76,921.

அமெரிக்கா நிலவரம்
உலகம் முழுவதும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,885. உலக நாடுகளில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,96,163. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 54,114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் அமெரிக்காவில் நேற்று மட்டும் 765 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் இதுவரை 23,22,48,399 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7,06,058 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்திலும் பாதிப்பு
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் நேற்று 31,348 பேருக்க்கு கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. இங்கிலாந்தில் 122 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் இதுவரை மொத்தம் 76,31,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கிலாந்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,36,105 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் குறைவு- ரஷ்யாவில் அதிக மரணங்கள்
இந்தியாவில் நேற்று 28,149 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. முந்தைய நாட்களை விட இது சற்று குறைவுதான். இந்தியாவில் நேற்று 258 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை மிக அதிகமாக பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் 822 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 22,041 ஆகும். ரஷ்யாவில் இதுவரை 2,03,095 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலிலும் மரணங்கள் அதிகம்
பிரேசில் நாட்டிலும் கொரோனா மரணங்கள் அதிகமாக உள்ளன. பிரேசிலில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 548 ஆக பதிவாக்கி இருக்கிறது. பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,688. பிரேசிலில் இதுவரை மொத்தம் 5,94,246 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications