உக்ரைன் போருக்கு நடுவே.. திடீரென இந்தியா வந்துள்ள ரஷ்யாவின் டாப் அமைச்சர்! என்ன காரணம்? பரபர தகவல்
டெல்லி: உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர், 5ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, உக்ரைன் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இதனால் ரஷ்யா பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர்
ஒருபுறம் போர் நடைபெற்றாலும் கூட மறுபுறம் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் பெரும்பாலும் எந்தவொரு உடன்பாடும் ஏற்படாத நிலையில், திடீர் திருப்பமாகக் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் சுற்றியுள்ள படைகளைத் திரும்பப் பெறவும் ரஷ்யா ஒப்புக் கொண்டது. வரும் நாட்களில் போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்
இந்தச் சூழலில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தற்போது டெல்லி வந்துள்ளார். உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியிலும் இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பிற உறவுகளைத் தொடர வழிகளைக் கண்டறிந்து வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைன் போருக்குப் பின்னர், ரஷ்யாவின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார். முன்னதாக கடந்த வாரம் தான், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், சீன அமைச்சர் வாங் யீ ஆகியோர் டெல்லி வந்திருந்தனர். இந்தச் சூழலில் தான், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இப்போது இந்தியா வந்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் மூன்றாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் தான், அமைதி பேச்சுவார்த்தைக்காக அவர் துருக்கி சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து சீனாவுக்கும் அவர் சென்று இருந்தார்.

இந்தியாவின் நிலைப்பாட்டு
உக்ரைன் போர் காரணமாக மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருந்த போதிலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் தொடங்கி பல்வேறு பொருட்களை வாங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே அமெரிக்கா உடன் இந்தியா நெருக்கம் காட்டி வரும் போதிலும், சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ரஷ்யா நீண்ட காலமாக இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்து இருந்தது குறிப்பிட்த்கக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications