பாதுகாப்பு தளவாடங்களை தரும் ரஷ்யா? இந்தியா வரும் விளாடிமிர் புதின்.. மோடியுடன் முக்கிய சந்திப்பு
டெல்லி: நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். டிசம்பர் 4ம் தேதி இந்தியா வரும் விளாடிமிர் புதினுக்கு இந்திய குடியரசு தலைவர் ஜனாதிபதி திரெளபதி முர்மு விருந்து வழங்கி வரவேற்கிறார். அதன்பிறகு புதின், பிரதமர் மோடியை சந்தித்து இருநாடுகளின் உறவு பற்றி விவாதிக்க உள்ளார்.
நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. அதேபோல் பிரதமர் மோடிக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வருகை தர உள்ளார்.

இதனை இந்திய வெளியுறவுத்துறை இன்று உறுதி செய்துள்ளது. அதன்படி விளாடிமிர் புதின் டிசம்பர் 4 -5ம் தேதிகளில் இந்தியாவில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி இந்தியா வரும் விளாடிமிர் புதின் டிசம்பர் 5ம் தேதி சுற்றுப்பயணத்தை முடித்து நம் நாட்டில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளார்.
இந்தியா வரும் விளாடிமிர் புதினை நம் நாட்டின் ஜனாதிபதி திரெளபதி முர்மு வரவேற்று டெல்லி ராஷ்ட்ரிய பவனில் விருந்து வழங்க உள்ளார். அதன்பிறகு டெல்லியில் இந்தியா - ரஷ்யா இடையேயான 23வது உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு பிரதமர் மோடி, புதின் ஆகியோர் தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேச உள்ளனர்.
இந்த சந்திப்பின்போது நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. குறிப்பாக பாதுகாப்பு துறை சார்ந்த 5ம் தலைமுறை விமானம், எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குவது தொடர்பாக பேசப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் சுமார் 65 சதவீதத்துக்கும் அதிகமானவை ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டவை தான். இதனால் தான் விளாடிமிர் புதினின் இந்திய வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும். பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து புதினிடம் கூறி வருகிறார். இந்த போருக்கு பிறகு முதல் முறையாக விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். இதனால் உக்ரைன் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி, புதினிடம் பேசலாம்.
அதேபோல் உக்ரைன் போர் விஷயத்தில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதோடு ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இதற்கிடையே தான் நம் நாடு நமக்கு தேவையான கச்சா எண்ணெயில் 36 சதவீதம் முதல் 38 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வந்தது. அதுவும் சலுகை விலையில் கிடைத்தது. இதனை டிரம்ப் விரும்பாமல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நம் நாடு உதவுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீத வரியை போட்டார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஓரளவு குறைத்துள்ள நிலையில் புதினும், மோடியும் சந்தித்து பேச உள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஷ்யாவிற்கு பதில் தங்களின் ஆயுதங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், டொனால்ட் டிரம்ப் கூறினார். அதுமட்டுமின்றி 5ம் தலைமுறை விமானத்தை நம் நாட்டுக்கு தருவதாகவும் டிரம்ப் வாக்குறுதி அளித்தார். ஆனால் எப் 35 ரக போர் விமானங்களை வாங்க நம் நாடு இன்னும் முடிவு செய்யவில்லை.
அதேவேளையில் ரஷ்யா Su - 57 ரக 5ம் தலை,முறை விமானத்தை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானத்தை வாங்க நம் நாடு ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவும் விளாடிமிர் புதினின் இந்திய வருகையை உன்னிப்பாக கவனிப்பார் என்பதால் இந்த விவகாரம் உலகம் முழுவதும் உற்றுநோக்கப்பட உள்ளது.
மேலும் கடைசியாக பிரதமர் மோடியும், விளாடிமிர் புதினும் சீனாவில் வைத்து சந்தித்து பேசினர். ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடந்தது. இதில் மோடி, புதின் ஆகியோர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் நீண்டநேரம் தனியாக காருக்குள் அமர்ந்து பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்றது. இந்நிலையில் தான் தற்போது புதின் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications