”இந்தியாவுக்கு வந்து பாருங்க அப்புறம் தெரியும்..” விருந்தோம்பலால் நெகிழ்ந்து போன ரஷ்ய சுற்றுலா பயணி
டெல்லி: "இந்தியாவுக்கு வந்து பாருங்க அப்புறம் தெரியும்.." என்று ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பயணிக்கு, டெல்லியில் ஒரு குடும்பத்தினர் மதிய விருந்து அளித்தனர். தால், ரொட்டி, தாளி உணவு என அவர்களது விருந்து உபசரிப்பை பார்த்து நெகிழ்ந்துபோன அந்த சுற்றுலாப் பயணி இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்தியா எப்போதுமே விருந்தோம்பலுக்கு பெயர் போனது. வீட்டிற்கு வரும் உறவினர்களை உபசரித்து அனுப்புவதில் இந்தியர்களுக்கு ஈடாக உலகில் வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் இது குறித்து சிலாகித்து பதிவுகள் போடுவதை பார்க்க முடிகிறது. அப்படியான ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விருந்து உபசரிப்பால் நெகிழ்ந்த ரஷ்ய நபர்
இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பம் காட்டிய உபசரிப்பை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த ரஷ்ய சுற்றுலா பயணி இது குறித்த விடியோவையும் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று அதை வீடியோவாகவும் மெஹ் அப்டேட்ஸ் என்ற தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள அந்த ரஷ்ய நபர், தான் செல்லும் இடங்கள் குறித்தும் சந்திக்கும் நபர்கள் பற்றியும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் டெல்லியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று அங்கு வீடியோ பதிவிட்டு கொண்டு இருந்துள்ளார்.
தால், ரொட்டி, தாளி உணவு
அப்போது அங்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த ஒரு குடும்பம், ரஷ்ய சுற்றுலா பயணிக்கு தாங்கள் கொண்டு வந்து இருந்த மதிய உணவை பகிர்ந்து அளித்துள்ளனர். தால், ரொட்டி, சப்ஸி, அப்பளம் என இந்தியாவின் மிகவும் பிரபலமான மதிய உணவான தாளி உணவை வழங்கியுள்ளனர். அதை ருசித்து சாப்பிட்ட ரஷ்ய சுற்றுலா பயணி, அப்பளத்தை பார்த்ததும் இது என்ன என்று வியப்புடன் கேட்டதோடு, மிகவும் டேஸ்ட் ஆக இருக்கிறது என்று கூறுகிறார்.
மதிய உணவை சாப்பிட்டு முடித்த பிறகு, டெல்லியை சேர்ந்த அந்த குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த ரஷ்ய சுற்றுலா பயணி, தன்னிடம் இருந்த மிட்டாய் ஒன்றையும் ஒருவருக்கு கொடுத்துவிட்டு விடை பெற்று சென்றார். பின்னர் தனது வீடியோவில், இந்திய குடும்பம் காட்டிய பேரன்பு, விருந்தோம்பல் குறித்தும் நெகிழ்ச்சி பட பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், "இந்தியாவுக்கு வாங்க.. ஆன்மீகத்தின் உண்மையான அர்த்தத்தைக் இந்தியா உங்களுக்கு காண்பிக்கும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
🇷🇺❤️🇮🇳 Russian Tourist Overwhelmed by Indian Hospitality - "Come to India"
— RT_India (@RT_India_news) March 2, 2025
Simple gestures build friendships that last a life time. pic.twitter.com/yfqMsTubpk
நெட்டிசன்கள் கருத்து
ரஷ்ய சுற்றுலாப் பயணியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இந்தியாவின் விருந்தோம்பல் மீண்டும் பலரது மனங்களையும் வென்றுள்ளது. ஒரு சிறிய செயல், வாழ்நாள் முழுவதும் நட்பை ஏற்படுத்துகிறது- இதுதான் இந்தியாவின் மாயாஜாலம்!" என்று பதிவிட்டு இருக்கிறார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இந்தியாவை ரஷ்யர்கள் நேசிக்கிறார்கள். ஒரு சில மேற்கத்திய நாட்டவர்கள் மட்டுமே இந்தியர்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் வேலைகளை நாம் பறிக்கிறோம் என்பதற்காக" என பதிவிட்டு இருக்கிறார்.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications