ஒரு நாடு மட்டும்தான் மக்கர் செய்கிறது.. மற்றபடி எல்லாமே ஓகேதான்.. அமைச்சர் ஜெய்சங்கர் அட்டாக்!
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒரு நாட்டை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்குகிறார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் நிறைய விஷயங்களை பேசினார்.
அதில் தேசியவாதம் என்பது எதிர்மறையான விஷயம் அல்ல. இந்தியாவின் தேசியவாதம் பிறநாடுகளுடன் இந்தியா நல்ல உறவை மேற்கொள்ள தடுப்பதே இல்லை. எனவே தேசியவாதம் எதிர்மறையான விஷயம் அல்ல.

அண்டை நாடுகள்
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒரு நாடு தவிர (பாகிஸ்தான்) மற்ற அனைத்து நாடுகளும் நன்றாக ஒத்துழைப்பு அளிக்கின்றன. அந்த நாடும் விரைவில் ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறேன். இந்த நாட்டின் சில தவறான மனநிலை மாற வேண்டும்.

முன்னெடுக்கலாம்
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம். இந்தியா பெரிய நாடாக வளர்ந்துவிட்டதால் பிறநாடுகளுக்கு முன் மாதிரியான திட்டங்களை நாங்களே முன்னெடுப்போம் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சிறப்பு அந்தஸ்து
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

கோபம்
காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் சென்ற இந்திய தூதரை அந்நாடு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா கடும் அதிருப்தியில் இருக்கிறது. மேலும் இந்த பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயல்வதும் இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications