பாஜகவில் சேர போகிறேனா.. யார் சொன்னது.. அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லை.. சச்சின் பைலட் ஓபன் டாக்!
டெல்லி: நான் பாஜகவில் சேர மாட்டேன் என்றும் நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன் என்றும் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் ஆட்டம் கண்டு வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டும் துணை முதல்வராக இரு்த சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது.

காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்தும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை நீக்க முடிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தான்
மாநில கல்வித் துறை அமைச்சரான கோவிந்த் சிங் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். மேலும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு முதல்வர் கெலாட் பரிந்துரைத்தார்.

பாஜகவில் இணைவார்
இந்த நிலையில் சச்சின் பைலட் டிவிட்டர் பதிவில் உண்மை ஒரு போதும் தோற்காது என்று குறிப்பிட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சச்சின் இன்று காலை பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

திட்டமே இல்லையே
இதுகுறித்து சச்சின் பைலட் கூறுகையில் நான் பாஜகவில் இணையமாட்டேன். நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன். நான் பாஜகவில் சேரவில்லை. பாஜகவில் சேர எனக்கு எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னை பாஜகவுடன் இணைக்க முயற்சிப்பது காங்கிரஸ் தலைமையிடம் என்னை இழிவுப்படுத்த வைக்கும் முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications