சோனியாவை சந்திக்க பிரியங்காவிடம் ஒற்றை கண்டிஷன் போட்ட சச்சின் பைலட்.. இன்று உள்ளதும் போச்சு நிலை!
டெல்லி: இன்னும் ஓராண்டுக்குள் தன்னை ராஜஸ்தான் மாநில முதல்வராக அறிவிக்க வேண்டும் என சச்சின் பைலட் கோரிக்கை வைத்துள்ளதாக பிரியங்கா காந்தியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது. துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது 18 ஆதரவு எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் தனித்து செயல்படத் தொடங்கினார். அவர்களை ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். இந்த நிலையில் கட்சி கொறடா உத்தரவை சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி
இந்த நிலையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்னர் அதாவது துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரியங்கா காந்தி இறங்கினார். அவர் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

வட்டாரங்கள்
அவர்கள் கூறுகையில் இன்னும் ஓராண்டுக்குள் தன்னை ராஜஸ்தான் முதல்வராக அறிவிக்க வேண்டும் என சச்சின் பைலட் கோரிக்கை விடுத்தாராம். அதுவும் பொதுமக்கள் முன்பு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் இந்த கோரிக்கையை ஏற்காத வரை சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் நேரடியாக சந்திக்க மாட்டேன் என்று பைலட் தெரிவித்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சச்சின்
இந்த டீல் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு பிரியங்கா தெரிவித்ததை அடுத்துதான் அவரை துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநில தலைவர் பதவிகளில் இருந்து நீக்குவது என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்ததாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தனக்கு எதிராக செயல்படும்போது சமரசம் குறித்து எப்படி பேச முடியும் என சச்சின் கேட்டுள்ளார்.

அசோக் கெலாட்
காங்கிரஸ் உத்தரவாதங்களை இனி நம்ப முடியுமா என உறுதியாக தெரியவில்லை. ஒரு புறம் காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என பேசுகிறது, மறுபுறம் தனது பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நான் அசோக் கெலாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சச்சின் பைலட் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications