"தலைவா".. சூப்பர் ஸ்டாரை புகழ்ந்த கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின்.. வைரல் ட்விட்
டெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா உலகில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுதான் தாதா சாகேப் பால்கே விருது. திரை உலகில் நீண்ட காலம் சாதித்த கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். திரைத்துறையின் தந்தை என்று போற்றப்படும் தயாரிப்பாளர் தாதா சாகேப் பால்கே பெயரில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
தமிழ் சினிமா உலகில் கே.பாலசந்தர், சிவாஜி கணேசன் ஆகிய கலைஞர்கள் இந்த உயரிய விருதை பெற்றுள்ளனர்.

யார் பெற்றுள்ளனர்
இந்திய அளவில் இந்த உயரிய விருதை அமிதாப் பச்சன் , லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே போன்றவர்களும் பெற்று இருக்கிறார்கள். கடந்த 2019ம் வருடம் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று டெல்லியில் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே வழங்கப்பட்டது. அதேபோல் நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

சச்சின்
இந்த நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினிகாந்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள ட்வீ ட்டில், வெகு சில நடிகர்கள் மட்டுமே தங்கள் படம் வெளியாகும் போதெல்லாம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதில் தலைவர் ரஜினிகாந்தும் ஒருவர்.

தலைவா
தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் திரையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளார். அதோடு தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள், என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தை "தலைவா" என்று அழைத்து சச்சின் டெண்டுல்கர் ட்வீ ட் செய்துள்ளார்.
Recommended Video

சச்சின்
ரஜினியை பல இடங்களில் பிடிக்கும் என்று சச்சின் நேரடியாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் சச்சினின் இந்த ட்வீ ட்டை ரசிகர்கள் பலர் ஷேர் செய்து வருகிறார்கள். அதோடு கமெண்ட் பாக்சில் சச்சின் ரஜினி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
திறமை இருக்கு சரி.. அந்த பண்பை பாருங்க! சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications