டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ஜக்கி வாசுதேவ்.. டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி!
டெல்லி: மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ஜக்கி வாசுதேவ் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குணமடைந்து வந்தார். இந்நிலையில், ஜக்கி வாசுதேவ் உடல்நிலை தேறிய நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஜக்கி வாசுதேவுக்கு அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலி இருந்ததாகவும் சில நாட்களுக்கு முன்பு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஜக்கி வாசுதேவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜக்கி வாசுதேவின் உடல்நிலை வேகமாக மீண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஜக்கி வாசுதேவ் செய்தித்தாள் படிக்கும் வீடியோவும் அண்மையில் வெளியாகியிருந்தது. அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜக்கி வாசுதேவ் டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கடங்த மார்ச் 17ஆம் தேதியன்று அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி, டாக்டர் எஸ் சட்டர்ஜி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை குழுவினருக்கும் அவர்களின் ஆதரவு மற்றும் கவனிப்புக்கும் ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் சத்குரு அனைவரிடமிருந்தும் பெற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications