யார்னு பாருங்க! கூலாக பேப்பர் படிக்கும் ஜக்கி வாசுதேவ்.. மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு முன்னேற்றம்
டெல்லி: மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜக்கி வாசுதேவ் வேகமாக குணமடைந்து வருகிறார். இந்நிலையில், அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.

அண்மைக் காலமாக ஜக்கி வாசுதேவுக்கு ஒற்றைத் தலைவலி இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தகசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வருகிறார். ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவின் சமூக வலைதள பக்கத்தில் மற்றொரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், செய்தித்தாள் வாசித்து வருகிறார். இந்த 19 விநாடி கொண்ட வீடியோவை #SpeedyRecovery என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டுள்ளது.
#Sadhguru #SpeedyRecovery pic.twitter.com/rTiyhYPiJM
— Sadhguru (@SadhguruJV) March 25, 2024
முன்னதாக, சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல் நிலை பற்றி ஈஷா அறக்கட்டளையினர் வெளியிட்ட அறிக்கையில், "சில நாட்களுக்கு முன்னர் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல்நிலையில், முன்னேற்றம் எதிர்பார்த்த விட சிறப்பாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications