காளையார் கோவில் போர்..காலா பாணி நாவலை எழுதிய மு.ராஜேந்திரன்..தேடி வந்த சாகித்ய அகாடமி விருது
டெல்லி : காலா பாணி நாவலை எழுதிய எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார்கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று புதினம் ஆகும். சாகித்ய அகாடமி விருது பெறுபவர்களுக்கு தாமிரபட்டயமும் ரூ.1,00,000 ரொக்கமும் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசின் சார்பில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதுகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதை எழுதிய எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். தாமிர பட்டயம் விருதுடன் ரூ.1,00,000 பணமும் வழங்கப்படும்.

2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் படைப்புக்காக 2022ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. எழுதியுள்ள 'காலாபாணி' நாவல் தேர்வாகியுள்ளது.
மு.ராஜேந்திரன் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வடகரை கிராமத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்ற மு. ராஜேந்திரன், தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின்மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் சட்டக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழக வரலாற்றுகால செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் பிரதிகளை தேடியெடுத்து தொகுத்தல் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
நேரடியாக களப்பணியாற்றி தொகுத்த வரலாற்றின் உண்மைத் தகவல்களை ஆவண புத்தகங்களாகவும் வெளியிட்டார். அதனையொட்டி எழுந்த விடுபட்ட வரலாற்று சொல்லாடல்களை தனது புனைவில் புகுத்தி நாவல்களாகவும் எழுதி வந்தார். 1801, வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு, காலா பாணி போன்ற நாவல்கள் சிறப்பானவை.
இவர் எழுதிய காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெறும் காலா பாணி நாவல், இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. 1801ஆம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். காலா பாணி நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் குறித்து நாவலில் இடம்பெற்றுள்ளது.
இவரது படைப்புகளுக்காக தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு அறக்கட்டளைகள் இவருக்கு விருதுகள் பல வழங்கி கவுரவித்துள்ளன. இவர் டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். இந்திய ஆட்சிப்பணியில் பொறுப்பேற்று தமிழகத்தின் பலவிதமான துறைகளில் பணியாற்றியானார். தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன்.
தனக்கு விருது கிடைத்தது பற்றி தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மு. ராஜேந்திரன், இந்த நாவல் கொரோனா காலக்கட்டத்தில் சிவகங்கையில் வெளியானது. காலா பாணி நூலுக்கு வரவேற்பு இருக்கும் என்றே நான் எதிர்பார்த்தேன். இதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.
இந்த நாவலில் அதிகம் அறியப்படாத ஜெகநாதன் ஐயர், மனக்காடு சாமி, மருதுபாண்டியர் மகன் 15 வயது சிறுவன் துரைசாமி ஆகியோரை குறித்து எழுதியது சந்தோசமாக இருந்தது என்று கூறினார். இளைஞர்கள் வரலாற்று புத்தகங்களை விரும்பி படிக்கின்றனர். குறிப்பாக நமது வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் மு. ராஜேந்திரன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications