Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களே.. விரைவில் வரப்போகுது அசத்தல் நியூஸ்.. வெளியான முக்கிய தகவல் என்னன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடப்பு தவணைக்கு சுமார் 4% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் உள்ள 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜனவரி முதல் ஜுன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கு உயர்த்தி அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படி நிலுவைத்தொகையை அனுப்புவதுடன், இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Salary increase and DA hike 4 percentage as soon foe central govt employees, say sources

இதன்காரணமாக, அடிப்படை சம்பளத்தை உரிய முறையில் அதிகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதாவது 42 சதவீதம் அகவிலைப்படி வாங்குபவர்கள், இனிமேல் 46 சதவீதம் வாங்கக்கூடும்..

வருமானம்: அப்படியானால், 26 ஆயிரம் ரூபாய் அடிப்படை வருமானம் வாங்கும் நபர்களுக்கு, 11,960 ரூபாய் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில், இதற்கான அறிவிப்பு விரைவில் வரப்போவதாக தெரிகிறது. ஆனால், இந்த பணத்தை அரசு ஊழியர்களின் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்போகிறதாம்.

ஏஐசிபிஐயின் (AICPI - All India Consumer Price Index) இதுவரையான புள்ளி விவரங்களில் இருந்து இந்த முறையும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப் போகிறது என்பது தெளிவாகிறது. அதாவது, இனி ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் சம்பளத்தில் எவ்வளவு உயரவு இருக்கப்போகிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும்.

பொதுவாக, அகவிலைப்படி கணக்கீடு என்பது, அடிப்படை சம்பளத்திலிருந்துதான் செய்யப்படுகிறது... ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.20,000 எனில், அகவிலைப்படியில் மட்டுமே கணக்கிடப்படும்.. அகவிலைப்படியில் 4% உயர்வு இருந்தால், ஊழியரின் சம்பளம் மாதம் சுமார் ரூ.800 ஆக அதிகரிக்கும்.

அகவிலைப்படி: அகவிலைப்படியின் திருத்தப்பட்ட விகிதங்கள் 2023 ஜூலை 1 முதல் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 3,500 வரையிலான அடிப்படை ஊதியத்திற்கு, ஜூலை 1 முதல் குறைந்தபட்சம் ரூ.15,428க்கு உட்பட்டு ஊதியத்தில் 701.9 சதவீதம் அகவிலைப்படியாக இருக்கும். மாதம் ரூ.3,501 முதல் ரூ.6,500 வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.24,567 மற்றும் 526.4 சதவீத சம்பளம் வழங்கப்படும்.

ரூ.6,500 முதல் ரூ.9,500 வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களின் அகவிலைப்படி 421.1 சதவீதமாக இருக்கும். அவர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ.34,216 ஆக இருக்கும். அதன்படி, ​​ஜூலை மாதத்தில் உயரும் அகவிலைப்படியின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.. இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத துவக்கத்தில் வெளியாகலாம் என்கிறார்கள்.

குறியீடு: இதனிடையே இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த மாதங்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மே மற்றும் ஜுன் மாதங்களில் கணிசமான அளவில் குறியீடு உயர்ந்துள்ளதால் நடப்பு மாதங்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதங்கள் உயர்த்தப்பட்டு 46 சதவீதமாக அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, அரிசி, கோதுமை, பருப்பு, கோழி, முட்டை, பழங்கள் போன்ற பொருள்கள் குறியீட்டின் உயர்வுக்கு காரணம் என்றும் சொல்கின்றனர்.. எப்படிப்பார்த்தாலும், அகவிலைப்படி உயர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், அரசு ஊழியர்கள் தெம்பாக உள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஒரு விளக்கத்தை நேற்று தந்திருந்தார். அதாவது, மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்று இறந்துவிட்ட பிறகு, அவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களவை உறுப்பினர்கள்: இந்த குறைந்தபட்ச ஓய்வூதியமானது, விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சமீபகாலமாகவே செய்திகள் பரவி வருகின்றன.. இது குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்து பேசும்போது, "மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்சமயம் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9000 வழங்கப்படுகிறது. அதனை உயர்த்த அரசு இன்னும் திட்டமிடவில்லை.
மேலும் 44,81,245 ஓய்வூதியர்கள் இருக்கும்நிலையில், இதில் 20,93,462 பேர் குடும்ப ஓய்வூதியதாரர்கள்.. அவர்களுக்கு 2022-23 ஆம் நிதியாண்டில் 2,41,777 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப அகவிலைப்படி அதிகரித்து விரைவில் வழங்கப்படும்" என்றார்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+