இப்போ மட்டுமில்லை.. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 2009இல்.. இதே ஒடிசாவில் கோர விபத்தில் சிக்கியது தெரியுமா
டெல்லி: இன்றைய தினம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் தடம்புரண்டு மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2009ஆம் ஆண்டிலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதே ஒடிசாவில் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்தியாவில் நாட்டில் விமானத்தில் பயணிப்போரைக் காட்டிலும் அதிகப்படியானோர் ரயில்களில் பயணிக்கவே விரும்புவார்கள். கட்டணம் குறைவு, டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் பலரும் ரயில்களில் பணிப்பதையே விரும்புவார்கள்.

இருப்பினும், இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் சிக்னல் உள்ளிட்டவை இன்னும் பழங்கால தொழில்நுட்பத்தையே பயன்படுத்துவதாக விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. இதைச் சரி செய்யவும் மத்திய மாநில, அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே இன்றைய தினம் கோரமண்டல் ரயில் தடம் புரண்டிருந்த நிலையில், மற்றொரு ரயிலும் தடம் புரண்டது தெரிய வந்துள்ளது. அதாவது, கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அதன் மீது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மோதியுள்ளது. இது மட்டுமின்றி அங்கே லூப் தடத்தில் இருந்த மற்றொரு சரக்கு ரயிலும் மோதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதே ஒடிசாவில் 2009ஆம் ஆண்டிலும் இதேபோன்ற மோசமான விபத்தில் சிக்கியிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு பிப். மாதம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலின் 13 பெட்டிகள் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் தடம் புரண்டது. அப்போது இந்த விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 161 பேர் காயமடைந்தனர்.
ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையம் வழியாக அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த போது அப்போது பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலின் என்ஜின் முதலில் தடம் புரண்ட நிலையில், அடுத்தடுத்து வந்த மற்ற பெட்டிகளும் தடம் புரண்டுள்ளன. அன்றைய தினமும் இரவு 8 மணியளவில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

அப்போது விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் 200 முதல் 300 மீட்டர் தொலைவில் ரயில் பெட்டிகளில் பாகங்கள் சிதறிக் கிடந்தன. இது அப்போது ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இந்த ரயில் விபத்து குறித்து விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
கோரமண்டல் ரயில் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்குச் செல்லும் போது அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் அதிவேகமாகச் சென்ற நிலையில், மற்றொரு தண்டவாளத்திற்கு மாறும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று அதே ஒடிசாவில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது. இன்று பாலேஸ்வர் அருகே ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்த விபத்திற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications