மூன்றாக மடித்து வைத்துக் கொள்ளும் டிஸ்பிளே போன் வந்தாச்சா? சாம்சங் நிறுவனம் சொல்வது என்ன?
டெல்லி: சாம்சங் காலக்ஸியின் எஸ்23 எஃப்இ மாடல் போன் இன்னும் டிசைன் செய்யப்படவில்லை என்றும் அவ்வாறு வரும் தகவல்கள் வதந்தி என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னணு பொருட்களில் முக்கியமானது செல்போன்கள். இவை காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. பட்டன் போன், செங்கல் போன், வாக்கி டாக்கி போன், மிகச் சிறிய வகை போன் என தொடங்கி தற்போது போனையே கம்ப்யூட்டர் போல் ஆபரேட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது.
மார்க்கெட்டில் நிறைய கம்பெனிகளின் செல்போன்கள் உள்ளன. தற்போது மக்கள் விரும்பும் போன்கள் அதிக சிறப்புகளை கொண்டதே ஆகும். விலைக்கேற்ப செல்போனின் தொழில்நுட்பத்திலும் ஏற்றம் இருக்கும்.

ஸ்மார்ட் போன்
ஸ்மார்ட் போன்கள் ரூ 10 ஆயிரம் முதல் இருந்து வருகின்றன. அதிலும் சீன மாடல், கொரியன் மொபைல்கள் இதைவிட குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. அது போல் ரூ 3 லட்சம் விலை வரை போன்கள் கிடைக்கின்றன. விலை குறைந்த போன்களில் சிறப்பம்சங்கள் குறைவாக இருக்கும். உதாரணமாக மெம்மரி, போட்டோ கிளாரிட்டி, இம்பில்ட் மெமரி, ரியர் மற்றும் பிரண்ட் கேமரா ரிசொல்யூஷன் உள்ளிட்டவைகளில் வித்தியாசம் இருக்கும்.

அதிக விலை
ஆப்பிள் நிறுவனத்தின் போன்களும் அதிக விலை கொண்டதாக இருக்கும். இவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கும். போன்களை மற்றவர்கள் ஹேக் செய்ய முடியாது. ஒரு மினி கம்ப்யூட்டர் போல் இவை இருக்கும். ஆப்பிள் இல்லாமல் மற்ற பிராண்டுகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் சார்பில் Samsung Galaxy S23 FE எனும் போனை ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டதாக பலர் கூறி வருகிறார்கள்.

என்ன மாடல்
ஆனால் இதை சாம்சங் மறுத்துள்ளது. மேலும் அந்த மாடலுக்கு பதிலாக இசட் ஃபோல்டு 5 மற்றும் ஃபிலிப் 5 என டிஸ்பிளேவை 3 ஆக மடிக்கும் வகையில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது. இனிதான் இந்த போனை அறிமுகப்படுத்தினாலும் இந்த போனில் உள்ள ஸ்கிரீனை 3 ஆக மடித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் பிரித்துக் கொள்ளலாம், அதாவது எல்லாமே ஒரே நேரத்தில் ஒரே பேஜில் இருப்பது போல் இருக்கும்.

காலக்ஸி எஸ் 21 எஃப்இ
இந்த போன் புக் போல் இருக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு மடிப்பாக மடிக்கும் டிஸ்பிளே போன் உருவானது. தற்போது மூன்று மடிப்பாக மடிக்கும் டிஸ்பிளே விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கு கேலக்ஜி இசட் ஃபோல்டு என்ற பெயர் ஆகும். கடந்த ஆண்டு காலக்ஸி எஸ்21 எஃப்இ அறிமுகமானது. இன்னும் காலக்ஸி எஸ்22 எஃப்இ-யே இதுவரை டிசைன் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications