ஆஹா.. மொபைல் போனில் 100x ஜும் நிலாவின் தத்ரூப படம்.. அடுத்த லெவலில் சாம்சங்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: Samsung's Galaxy S23 Ultra போனில் நிலாவை தத்ரூபமாக‌ புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் டெக் ரிவ்யூவரான மார்க்யூ ப்ரௌனி.

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் Samsung's Galaxy S23 Ultra போனின் சிறப்பு அம்சங்களை தேடி வருகிறார்கள். அதன் விவரங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரியஸ் போன்கள் வெளியாகி சில நாட்களே ஆகிறது. Galaxy S23 Ultra மற்றும் Galaxy S23 இரண்டுமே பலரது வரவேற்பை பெற்றுள்ளது. Galaxy S23 Ultra போன் Galaxy S22 அல்ட்ராவைப் போலவே இருக்கிறது என்றும் ஆனால் இதில் அதே display size, அதே பேட்டரி சைஸ், அதே S Pen மற்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருப்பதாக டெக் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எனினும் கொஞ்சம் வித்தியாசமான கேமரா தொகுப்பு மற்றும் சில சிறிய சாப்ட்வேர் மேம்பாடுகளைக் Galaxy S23 Ultra கொண்டிருப்பதாகவும், ஆனால் custom chip உட்பட சில விஷயங்கள் மாறியிருப்பதாக சொல்கிறார்கள். குவால்காம் உடன் இணைந்து custom chip தயாரித்துள்ளார்கள் என்றும், இது தான் Galaxy S23 Ultra மொபைலில் பேட்டரி ஆயுளை வேற லெவலில் மாற்றி உள்ளதாக கொண்டாடுகிறார்கள் டெக் நிபுணர்கள். 72 மணி நேரம் பேட்டரி தாங்குவதாக கூறுகிறார்கள்.

நிலா புகைப்படம்

நிலா புகைப்படம்

Samsung's Galaxy S23 Ultraவில் கேமராவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 100 எக்ஸ் பிரேமில் ஜும் செய்து போனில் நிலாவை தத்ரூபமாக‌ புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் டெக் ரிவ்யூவரான மார்க்யூ ப்ரௌனி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த எலான் மஸ்க், வாவ் என்று ட்விட் போட்டுள்ளார். பலரும் தங்கள் போனில் ஜூம் செய்து நிலாவை போட்டோ எடுத்து அவருக்கு பதில் அளித்து வருகிறார்கள்.

இரண்டு மடங்கு அதிகம்

இரண்டு மடங்கு அதிகம்

இந்நிலையில் Samsung's Galaxy S23 Ultra போன் வேண்டும் என ஒரே நாளில் முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை வெளியாகி உள்ளது. ஒரு நாளில் மட்டும் Rs 1,400-cr கோடிக்கு ஆர்டர் வந்திருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. சாம்சங் இந்தியா மொபைல் நிறுவனத்தின் சீனியர் Vice President Raju Pullan இந்த தகவலை தெரிவித்துள்ளார். Samsung's Galaxy S22ஐவிட Samsung's Galaxy S23க்கு முன்பதிவு இரண்டு மடங்கு அதிகமாக வந்திருப்பதாக கூறியுள்ளார். " Samsung's Galaxy S23 போன் வெளியான முதல் 24மணி நேரத்தில் 1.4லட்சம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்" என்று ராஜு முல்லன் கூறினார்.

நொய்டாவில் தயாரிப்பு

நொய்டாவில் தயாரிப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி 23 வரை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .

இந்தியாவில் கேலக்ஸி எஸ்23 சீரியஸ் விலை, ஒரு போன் ரூ.75,000 முதல் ரூ.1.55 லட்சம் வரையில் உள்ளது.

Galaxy S23 போன் இந்தியாவில் நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

பழைய கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சாம்சங்கின் வியட்நாம் தொழிற்சாலையில் தயாரித்து அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய இறக்குமதி செய்து வந்தது.

சாம்சங் அதிரடி முடிவு

சாம்சங் அதிரடி முடிவு

இந்நிலையில் கேமரா லென்ஸ்கள் இறக்குமதிக்கான வரியை நீக்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததைத் தொடர்ந்து சாம்சங் இந்தியாவில் கேலக்ஸி எஸ் 23 ஐ இந்தியாவிலேயே உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி நொய்டாவில் போனை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. கேலக்ஸி எஸ்23 போன்கள் 12 மெகாபிக்சல்கள் முதல் 200 மெகாபிக்சல்கள் வரையிலான சென்சார்கள் கொண்ட ஐந்து கேமராக்களுடன் வருகிறது .

கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸின் விலை 2.7-30 சதவீதம் அதிகமாக இருக்கும். மொபைலில் சக்தி வாய்ந்த கேமரா சென்சார்கள், high power Snapdragon 8 Gen 2 Mobile Platform ஆகியவை உள்ளதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+