சஞ்சய் சிங் எம்.பி சஸ்பெண்ட்- நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்!
டெல்லி: ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற இரு சபைகளும் முடங்கி வருகின்றன. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

நாடாளுமன்றத்தில் நேற்று 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பிக்கள், மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதியில் முழக்கமிட்டனர். அப்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பெயரைக் குறிப்பிட்டு அவரை இருக்கையில் அமர வேண்டும் என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தொடர்ந்து வலியுறுத்தினார். இதனை மீறி சஞ்சய் எம்.பி. தொடர் முழக்கங்கள் எழுப்பினார். இதனால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஞ்சய் சிங் எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஞ்சய் சிங் எம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் அவருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்திலேயே தற்போதும் சஞ்சய் சிங் எம்பி அமர்ந்து தமது சஸ்பெண்ட் உத்தரவை நீக்க கோரி போராடி வருகிறார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications