அமெரிக்காவிற்கு சசி.. ரஷ்யாவிற்கு கனிமொழி.. மோடி அவசரமாக அனுப்பும் ராஜதந்திர டீம்.. என்ன காரணம்?
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா தனது அரசியல் தலைவர்கள் குழுவை அனுப்ப உள்ளது. இந்த போர் பற்றி கருத்துக்களை கூறவும் , சர்வதேச ஆதரவை பெறவும், உண்மைகளை வெளியிடவும், ராஜதந்திர ரீதியாக இந்தியாவின் கரங்களை வலுப்படுத்தவும் இந்த குழு களமிறக்கப்பட்டு உள்ளது.
இந்திய வரலாறு தெரிந்தவர்கள், நன்றாக பேச கூடிய தலைவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் பிரதமர் மோடியால் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் ஒன்பது பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்குவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே எகிப்து, கத்தார், எத்தியோப்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு தலைமை தாங்குவார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் தரூர், கனிமொழி, சஞ்சய் ஜா மற்றும் சுப்ரியா சுலே மற்றும் ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜயந்த் ஜெய் பாண்டா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் இந்த குழுக்களில் இடம்பிடித்துள்ளனர்.
சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீரியாவிற்கான குழுவிற்கு பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமை தாங்குவார். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் எட்டு பேர் கொண்ட குழுவிற்கு ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்குவார்.
இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான குழுவிற்கு ஜேடியு நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா பொறுப்பேற்பார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கான ராஜதந்திர தொடர்புகளுக்கு ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்பார்.
திமுக எம்பி கனிமொழி ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான குழுவிற்கு தலைமை தாங்குவார்.
என்ன காரணம்?
இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியாவிற்கு ஆதரவாக எந்த நாடும் நேரடியாக குரல் கொடுக்கவில்லை.
போர் நடந்து கொண்டு இருந்த போதே IMF ல் பணம் வாங்கி பாகிஸ்தான் சாதித்தது.
அப்போது இந்தியா தவிர மற்ற உலக நாடுகள் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை.
பிரிக்ஸ் கூட்டமைப்பு பெரிதாக பாகிஸ்தானை கண்டிக்கவில்லை.
QUAD நாடுகள் எதுவும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. இப்படி பலம் வாய்ந்த இந்திய கூட்டமைப்பு எதுவும் பாகிஸ்தானை நேரடியாக கண்டிக்கவில்லை.
ராஜாங்க ரீதியாக இது இந்தியாவிற்கு பின்னடைவு. இதை சரி செய்யவே.. இந்தியாவின் உறவுகளை புதுப்பிக்கவே இந்த குழு களமிறக்கப்பட்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா தனது அரசியல் தலைவர்கள் குழுவை அனுப்ப உள்ளது. இந்த போர் பற்றி கருத்துக்களை கூறவும், சர்வதேச ஆதரவை பெறவும், உண்மைகளை வெளியிடவும், ராஜதந்திர ரீதியாக இந்தியாவின் கரங்களை வலுப்படுத்தவும் இந்த குழு களமிறக்கப்பட்டு உள்ளது.
குழுவின் முழு விபரங்கள்
குரூப்-1 சவுதி அரேபியா, குவைத் பஹ்ரைன், அல்ஜீரியா
பிரதிநிதிகள் தலைவர்: பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா
உறுப்பினர்கள்: நிஷிகாந்த் துபே (பாஜக), ஃபாங்னான் கொன்யாக் (பாஜக), ரேகா ஷர்மா (பாஜக), அசாதுதீன் ஓவைசி (ஏஐஎம்ஐஎம்), சத்னம் சிங் சந்து, குலாம் நபி ஆசாத், ஹர்ஷ் ஷ்ரிங்லா
குழு-2 இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளது.
பிரதிநிதிகள் குழு தலைவர்: பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத்
உறுப்பினர்கள்: தகுபதி புரந்தேஸ்வரி (பாஜக), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா (யுபிடி)), குலாம் அலி கட்டனா, அமர் சிங் (காங்கிரஸ்), சமிக் பட்டாச்சார்யா (பாஜக), எம்ஜே அக்பர், பங்கஜ் சரண்
குழு-3 இந்தோனேசியா, மலேசியா, கொரிய குடியரசு, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளது.
பிரதிநிதிகள் தலைவர்: ஜேடியு எம்பி சஞ்சய் குமார் ஜா
உறுப்பினர்கள்: அபராஜிதா சாரங்கி (பாஜக), யூசுப் பதான் (திரிணாமுல் காங்கிரஸ்), பிரிஜ் லாலா (பாஜக), ஜான் பிரிட்டாஸ் (CPIM), பிரதான் பருவா (BJP), ஹேமங் ஜோஷி (BJP), சல்மான் குர்ஷித், மோகன் குமார்
குழு-4 ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்குச் செல்ல
பிரதிநிதிகள் தலைவர்: சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே
உறுப்பினர்கள்: பன்சூரி ஸ்வராஜ் (பாஜக), இடி முகமது பஷீர் (ஐயுஎம்எல்), அதுல் கர்க் (பாஜக), சஸ்மித் பத்ரா (பிஜேடி), மனன் குமார் மிஸ்ரா (பாஜக), எஸ்எஸ் அலுவாலியா, சுஜன் சினாய்
குழு-5 - அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளது
பிரதிநிதிகள் குழு தலைவர்: காங்கிரஸ் எம்பி சசி தரூர்
உறுப்பினர்கள்: சாம்பவி (எல்ஜேபி (ராம் விலாஸ்)), சர்ஃபராஸ் அகமது (ஜேஎம்எம்), ஜிஎம் ஹரிஷ் பாலயோகி (டிடிபி), ஷஷாங்க் மணி திரிபாதி (பாஜக), புவனேஸ்வர் கலிதா (பாஜக), மிலிந்த் முரளி தியோரா (சிவசேனா), தரன்ஜித் சிங் சந்து, தேஜஸ்வி சூர்யா (பிஜேபி)
குழு-6 ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா ரஷ்யா
பிரதிநிதித் தலைவர்: திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி
உறுப்பினர்கள்: ராஜீவ் ராய் (சமாஜ்வாடி), மியான் அல்தாஃப் அகமது (என்.சி), பிரிஜேஷ் சவுதா (பாஜக), பிரேம் சந்த் குப்தா (ராஷ்டிரிய ஜனதா தளம்), அசோக் குமார் மிட்டல் (ஏ.ஏ.பி), மஞ்சீவ் எஸ். பூரி, ஜாவேத் அஷ்ரஃப்
எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் குழு-7
பிரதிநிதித் தலைவர்: என்.சி.பி (ஷரத் பவார் பிரிவு) எம்.பி. சுப்ரியா சுலே
உறுப்பினர்கள்: ராஜீவ் பிரதாப் ரூடி (பாஜக), விக்ரம்ஜீத் சிங் சாஹ்னி (ஏ.ஏ.பி), மனிஷ் திவாரி (காங்கிரஸ்), அனுராக் சிங் தாக்கூர் (பாஜக), லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு (டி.டி.பி), ஆனந்த் சர்மா, வி. முரளீதரன், சையத் அக்பருதீன்
இந்திய வரலாறு தெரிந்தவர்கள், நன்றாக பேச கூடிய தலைவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் பிரதமர் மோடியால் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications