"டோல்கேட் நடைமுறையில் மாற்றம்".. 2 மாதத்தில் அமலாகும் செயற்கைகோள் கட்டண முறை - நிதின் கட்காரி
டெல்லி: தற்போது சுங்கச்சாவடிகளில்(டோல்கேட்) கட்டணம் வசூலிக்கும் முறையை முற்றிலுமாக நீக்கிவிட்டு சேட்டிலைட் அடிப்படையில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் முறை இன்னும் 2 மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
நம் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும்போது நாம் டோல்கேட்டுகளில் (சுங்கச்சாவடிகளில்) கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தொலைவுகளில் டோல்கேட்டுகள் அமைத்து இந்த கட்டணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிக நேரம் வாகனங்கள் அணிவகுத்த நின்றன. அதோடு பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் பாஸ்டேக்கை வாகனங்களில் ஒட்டியிருந்தால் அதனை டோல்கேட்டில் உள்ள சென்சார் ஸ்கேன் செய்து உரிய கட்டணத்தை பாஸ்டேக் ரீசார்ஜ் தொகையில் இருந்து எடுத்து கொள்ளும். இந்நிலையில் தான் தற்போது டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் முறையை மாற்றம் செய்ய மத்திய சாலை போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இன்னும் 2 மாதத்தில் சேட்டிலைட் முறையில் டோல்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதி செய்துள்ளார். அதாவது நேற்று சாலை போக்குவரத்து துறையில் டோல்கேட் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் தான் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, நம் நாட்டில் நடைமுறையில் உள்ள டோல்கேட் முறையை கைவிடும் நேரம் வந்துள்ளது. அதற்கு பதில் சேட்டிலைட் அடிப்படையிலான கட்டண முறையை அறிமுகப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் செயற்கைக்கோள் அடிப்படையில் கட்டண முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் அறிமுகப்படுத்த உள்ளது.
இது ஜிஎன்எஸ்எஸ் (GNSS)அல்லது Global Naviagation Satellite System முறை என அழைக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் தொலைவை செயற்கைகோள் கணக்கிடும். இந்த வாகனங்கள் டோல்கேட்டுகளில் செல்லும்போது அதற்கான கட்டணத்தை ஸ்கேனர் மூலம் எளிதாக செலுத்த முடியும். பணம் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும்.
தற்போது கர்நாடகாவில் உள்ளபெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை 275 மற்றும் ஹரியானாவில் .ள்ள பானிபட் - ஹிசார் தேசிய நெடுஞ்சாலை 709 ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தி பார்க்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 2 மாதத்தில் டோல்கேட்டுகளில் செயற்கைகோள் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
முதற்கட்டமாக தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்டேக் முறையுடன் இந்த செயற்கைகோள் அடிப்படையிலான கட்டண நடைமுறை கொண்டு வரப்படும். அதன்பிறகு சிறிது காலத்துக்கு பிறகு முழுவதுமாக செயற்கைகோள் அடிப்படையிலான கட்டண நடைமுறை கொண்டு வரப்படும்.
பாஸ்டேக் முறை நடைமுறையில் இருந்தாலும் கூட தற்போதும் வாகனங்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல் டோல்கேட்டில் ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இந்த புதிய முறை அமலாகும்போது பணியாளர்கள் தேவை இன்னும் குறையும். அதுமட்டுமின்றி கார்கள் டோல்கேட்டுகளில் நிற்கும் நேரம் இன்னும் சரியும் '' என தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications