சவுதி இளவரசர் - பிரதமர் மோடி சந்திப்பில் கையெழுத்தான 8 முக்கிய ஒப்பந்தங்கள்.. முழு விவரம்!
டெல்லி: ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி துறை உள்பட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவில் கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி 20 நாடுகளில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டு சென்றார். அதேவேளையில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், இந்தியாவிலேயே தங்கினார்.

இன்று காலை பிரதமர் மோடியை முகம்மது பின் சல்மான் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து பேசினேன். மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையாக இருந்தது.
வரும் காலங்களில் இரு நாடுகளுக்கு இடையேயுமான வர்த்தக தொடர்புகள் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். நமது வர்த்தக உறவுகளை ஆய்வு செய்தோம். கிரிட் கனெக்ட்டிவிட்டி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பாதுகாப்பு, செமி கண்டக்டர்ஸ் மற்றும் விநியோக சங்கிலி ஆகியவற்றில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மகத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
இந்தியா - சவுதி அரேபியா இடையே எரிசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "சவுதி அரேபியாவும் இந்தியாவும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிக்சதி செயல் திறன், ஹைட்ரஜன் எலட்ரிசிட்டி, மற்றும் பெட்ரோலிய இருப்புகளில் முதலீடுகள், ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்தக் கூட்டத்தில் பொருளாதர வழித்தடம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது" என்றார். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் - பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையேயான உறவை புதிய அத்தியாத்தித்திற்கு எடுத்து செல்லும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்!












Click it and Unblock the Notifications