100 பீட்சாக்கள்.. ஆடிப்போன மாஜி காதலன்.. கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் போட்டு பழிவாங்கிய இளம்பெண்!
டெல்லி: உலகெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இன்று இளைஞர்கள் தங்களின் காதலிகளுக்கு விரும்பிய பொருட்களைப் பரிசாகக் கொடுப்பார்கள். ஆனால், இப்போது காதலர் தினத்தில் முன்னாள் காதலர்களைப் பழிவாங்கும் டிரெண்ட் இங்கு நடந்து வருகிறது. அதில் குருகிராமை சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழிவாங்கி இருக்கிறார்.
குர்கானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனைக் காதலர் தினமான இன்று பழிவாங்க முடிவு செய்துள்ளார். அட இதெல்லாம் எப்பவும் நடப்பது தானே என நீங்கள் நினைக்கலாம்.

அந்த பெண் எப்படிப் பழி வாங்க முடிவு செய்தார் என்பதே இங்கு மேட்டர். அந்த பெண் செய்த செயலால் முன்னாள் காதலன் ஆடிப்போய்விட்டார்.
100 பீட்சாக்கள்:
அதாவது முன்னாள் காதலனைப் பழிவாங்கத் திட்டமிட்ட அந்த பெண், அவரது வீட்டிற்கு பீட்சாக்களை ஆர்டர் செய்துள்ளார்.. அதுவும் 100 பீட்சாக்கள்.. இதெல்லாம் ஒரு பழிவாங்கும் செயலா.. இது நல்ல விஷயம் தானே.. நல்லா வயிறு ஃபுல் ஆகும் வரை சாப்பிட்டுவிட்டு, மீதம் இருப்பதை நண்பர்களுக்கு தரலாமே என நீங்கள் கேட்கலாம். அந்த பெண் இந்த பீட்சாக்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் போட்டதே இதில் பெரிய ட்விஸ்ட்.
24 வயதான அந்த பெண், தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு 100 பீட்சாக்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் போட்டுள்ளார். அவரது அட்ரஸ் இவருக்குத் தெரியும். இதனால் 100 பீட்சாக்களை சத்தமே இல்லாமல் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் போட்டுள்ளார்.
வாக்குவாதம்:
இன்று திடீரென அந்த இளைஞருக்கு உணவு வந்துள்ளதாகக் கால் வந்துள்ளது. உணவா எப்படி எதுவும் ஆர்டர் போடவில்லை என அந்த நபர் சொல்லிப் புரிய வைக்கும் முன்பு, 100 பீட்சாக்களுடன் டெலிவரி ஏஜெண்டுகள் வீட்டிற்கே வந்துவிட்டனர். கேஷ் ஆன் டெலவிரி என்பதால் பணமும் கேட்டுள்ளனர். ஆனால், 100 பீட்சா என்பதால் அவ்வளவு பணம் தர முடியாது என்று அந்த இளைஞன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் பலவித கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "காதலர் தினத்தன்று இப்படியொரு பரிசை யாரும் தந்திருக்க மாட்டார்" என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், காதலித்ததால் கிடைத்த பரிசு எனப் பதிவிட்டுள்ளார்.
முதல்முறை இல்லை:
அதேநேரம் முன்னாள் காதலர்கள் பழிவாங்க தங்கள் பார்ட்னர்கள் வீட்டிற்கு இதுபோல கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்வது இது முதல்முறை இல்லை. உலகெங்கும் இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன. அது தொடர்பான தகவல்களும் கூட இணையத்தில் டிரெண்டாகின. அதைப் பார்த்தே இந்த பெண்ணும் இதுபோல 100 பீட்சாக்களை ஆர்டர் செய்திருக்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டில், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இதுபோல தான் தனது முன்னாள் காதலனின் வீட்டு வாசலில் 1,000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் போட்டுள்ளார். "உன்னால் நான் மூன்று நாட்களாக அழுதேன், இப்போது உனது முறை" என்று கூறி வெங்காயத்தை ஆர்டர் போட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications