ஏன் இப்படி ஒரு டிராமா? ராகுல் காந்தி ஒன்னும் சாவர்க்கரல்ல.. எகிறும் அமைச்சர்.. அனலடிக்கும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது லலித் மோடி, நீரவ் மோடி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 4 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிபதி ஹெ.ஹெ.வர்மா தீர்ப்பளித்திருந்தார். எனவே ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறி உடனடியாக ஜாமீனும் வழங்கினார். தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அடுத்த நாள் அதாவது மார்ச் 24ம் தேதியன்று ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

போராட்டம்

போராட்டம்

அதாவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பி அல்லது எம்எல்ஏ ஏதேனும் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கும் அதிகமாக தண்டனை பெற்றிருந்தால் அவர்கள் அந்த பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். இந்த சட்டவிதிகளின் அடிப்படையில்தான் ராகுல் காந்தியை மத்திய அரசு பதவிநீக்கம் செய்திருக்கிறது. இதனை எதிர்த்து தற்போது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். நாடாளுன்றத்திற்கு கருப்பு உடையில் வந்த காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு சமாஜ்வாதி, ஜேடி(யு), பாரத் ராஷ்டிர சமிதி, சிபிஐ(எம்), ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, ஐயுஎம்எல், ம.தி.மு.க., கேரள காங்கிரஸ், டி.எம்.சி., ஆர்.எஸ்.பி., ஆம் ஆத்மி, ஜே-கே தேசிய மாநாட்டுக்கட்சி உள்ளிட்ட கூட்டணி மற்றும் கூட்டணி அல்லாத கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

 சத்யமேவ ஜெயதே

சத்யமேவ ஜெயதே

இந்த பேரணியில் 'சத்யமேவ ஜெயதே' என்று எழுதப்பட்டிருந்தது. இந்த போராட்டம் காரணமாக மக்களவை மாலை 4 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது பேசிய மல்லிகர்ஜுன கார்கே, "ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை. மத்திய அரசு சட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. இதனால் கருத்து சுதந்திரம் முற்றிலும் பறிபோய்விடும் அபாயம் இருக்கிறது. எங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும், "சூரத் நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளபோது ஏன் அவசர அவசரமாக ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்?" என்று கேள்வியெழுப்பினார்.

கண்டனம்

கண்டனம்

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "ராகுல் காந்தி தொடர்ந்து ஓபிசி சமூகத்தினரை இழிவுப்படுத்தி வருகிறார். நீதிமன்றத்தையும் அவர்கள் மதிக்கவில்லை. தற்போது ஏன் இந்த நாடகத்தை நடத்துகின்றனர்? நான் சாவர்க்கர் கிடையாது என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். அதையேதான் நாங்களும் சொல்கிறோம். அவர் வெளிநாடுகளுக்கு 6 மாத காலம் சுற்றுலா சென்றுவிடுவார். ஆனால் சாவர்க்கர் எந்த காலத்திலும் இதுபோன்று சுற்றுலா சென்றதில்லை. எனவே ராகுல் காந்தி சாவர்க்கராக ஆக முடியாது" என்று கூறியுள்ளார்.

 சாவர்க்கர்

சாவர்க்கர்

முன்னதாக தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, எனது பெயர் சாவர்க்கர் கிடையாது. காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டான் என்று விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+