Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டை காப்பாத்துங்க.. பிரசாந்த் கிஷோருடன் விஜய் இருக்கும் போட்டோ.. வைரல் போஸ்டரால் பரபரப்பு!

நடிகர் விஜய் மற்றும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கும் போட்டோஷாப் செய்யப்பட்ட போஸ்டர் ஒன்று தமிழகத்தில் பல இடத்தில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Posters of Actor Vijay with Prashant Kishore goes viral| பிரசாந்த் கிஷோருடன் விஜய் இருக்கும் போஸ்டர்

    டெல்லி: நடிகர் விஜய் மற்றும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கும் போட்டோஷாப் செய்யப்பட்ட போஸ்டர் ஒன்று தமிழகத்தில் பல இடத்தில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

    நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் வேகமாக தயாராகி வருகிறது. இதற்கு இடையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. தற்போது விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    அவரின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர்கள் பலர் ரஜினிக்கு ஆதரவாக இதில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    விஜய் ஆதரவு

    விஜய் ஆதரவு

    இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதில் ஆந்திராவை காப்பாற்றிவிட்டோம் கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கதான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள். மாஸ்டர் ஜோசப் விஜய், என்று இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் வடமாவட்டங்களிலும் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது.

    என்ன போஸ்டர்

    என்ன போஸ்டர்

    இந்த போஸ்டரில் நடிகர் விஜய் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் இருக்கிறார். இன்னொரு பக்கம் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இருக்கிறார். இவர்கள் இருவரும் விஜயுடன் பேசுவது போல போட்டோ ஷாப் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஜெகன் வெற்றிக்கு காரணமானவர் பிரசாந்த் கிஷோர்தான். இவர்தான் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

    யார் இவர்

    யார் இவர்

    பிரசாந்த் கிஷோர்தான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்தார். தற்போது அதே கிஷோர்தான் திமுகவிற்காக தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு இடையில்தான் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோரை சேர்த்து வைத்து போஸ்டர் வெளியிட்டு இருக்கிறார்கள். பல இடங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் இந்த போஸ்டர் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

    விஜய் வீட்டு ரெய்டு

    விஜய் வீட்டு ரெய்டு

    விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பின் விஜய் ரசிகர்கள் மூலம் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு மறுநாள் விஜய் ரசிகர்கள் உடன் நெய்வேலியில் செல்பி எடுத்தார். அவரை பார்க்க பல நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் வந்து இருந்தனர். அதன்பின் நடிகர் விஜய் இந்த செல்பியை இணையத்தில் வெளியிட்டார். இது பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+