மருத்துவ காரணத்துக்காக ஜாமீன் வாங்கி.. என்ன செய்தீங்க? சவுக்கு சங்கரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

மோசடி புகார்களின் கீழ் கடந்த மாதம் 13ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் நீதிமன்றத்தை அணுகி ஜாமின் பெற்றிருந்தார்.

Savukku Shankar Case Savukku Shankar Supreme Court

ஜாமினும் கிடைத்தது. ஆனால், ஜாமின் நிபந்தனைகளை அவர் மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சவுக்கு சங்கருக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் இருப்பதாக சொல்லித்தான் ஜாமின் பெறப்பட்டது. ஆனால், சிகிச்சையில் இருக்காமல். நிபந்தனையை முழுமையாக பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

ஜாமினில் உள்ள தனக்கு, நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சவுக்கு சங்கர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி திபங்க்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், ஒவ்வொரு வாரமும் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணைக்கு வருகிறதே என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். "இது என்ன புதிய வழக்கு? நாங்களும் பார்க்கிறோம் ஒவ்வொரு வாரமும் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கிறது" என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் விசாரணை தொடங்கியது.

சவுக்கு சங்கர் தொடர்பான ஜாமீன் நிபந்தனை தளர்வு கோரிய மனு மீதான விசாரணையின் போது, தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்கள் மருத்துவ அறிக்கைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது என சவுக்கு சங்கர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது அதனை மறுத்த நீதிபதிகள், "மருத்துவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை முன் வைக்காதீர்கள். மருத்துவர்களை பொருத்தவரை அவர்கள் ஒருவரை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில்தான் முடிவுகளை கூறுவார்கள்" என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினார்கள். மட்டுமல்லாது, நிபந்தனைகளை மீறியுள்ளதை குறிப்பிட்ட நீதிமன்றம், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+