மோசமான நிதி நிலை.. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ வங்கி திட்டம்?
மும்பை: யெஸ் வங்கியின் 49 சதவீதம் பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது யெஸ் வங்கி. கடந்த 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த வங்கி. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

இந்த வங்கியின் வருவாய் கடந்த 2018ஆம் ஆண்டு ரூ 25,491 கோடியாக இருந்தது. இந்த நிலையில் இந்த வங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கிவிட்டது. இதனால் இதன் நிதி நிலைமை மோசமடைந்துவிட்டது. வங்கிகளை நடத்துவதற்கே மூலதன முதலீடுகளை திரட்ட முடியாமல் போய்விட்டது.
இதையடுத்து யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மறுசீரமைப்பு மற்றும் மற்ற வங்கியுடன் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். யெஸ் வங்கியில் ரூ 2,450 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி குழுவும் சட்ட ஆலோசகர்களும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications