Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் அரசு வேலைக்காக இந்து எஸ்சி சான்றிதழ் பெற முடியாது: உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசு வேலையில் சேர கிறிஸ்தவ பெண்ணுக்கு தாழ்த்தப்பட்டவருக்கான சாதிச்சான்றிதழ் வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கிறித்தவ மதத்திற்கு மாறிய பெற்றோருக்குப் பிறந்தவர்கள் சாதி சான்றிதழில் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்று இருந்தாலும், பட்டியல் இனத்தவருக்கான சான்றிதழ்கள் அரசால் வழங்கப்படுவது இல்லை.. அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக கருத்தப்படுகிறார்கள்.

கிறித்தவ ஆதிதிராவிட பெற்றோருக்குப் பிறந்தவர்கள், இந்து, பெளத்தம் அல்லது சீக்கிய மதத்துக்கு மாறினால், அவர்களை அந்த மதத்தினர் ஏற்றுக் கொண்டால், மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சான்றிதழ் வழங்க வேண்டும் என்று 2009ம் ஆண்டு அரசாணையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரேம் இந்த அரசாணை எப்படி என்றால், ஒரு மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மீண்டும் தங்களுடைய தாய் மதத்துக்கு(இந்து மதத்திற்கு) திரும்பினால் மட்டுமே அந்த அரசாணை பொருந்தும் என்று தமிழகத்தில் இருக்கிறது. வேறு மதத்திற்கு மாறியவர்கள் எஸ்சி சாதி சான்றிதழ் பெற இயலாது. அவர்கள் மதம் மாறியிருந்தால், அதன்படியே பிசி, எம்பிசியாக மாறிவிடுவார்கள். கிட்டத்ததட்ட எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடைமுறையாக உள்ளது.

government job caste certificate supreme court

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர் தனது தந்தை இந்து என்றும், தாய் கிறிஸ்தவர் என்பதால் தான் ஒரு இந்து என்று கூறி தனக்கு தாழ்த்தப்பட்டவருக்கான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் அவரது தந்தை உள்பட அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரியவந்தது. இதனையடுத்து செல்வராணிக்கு தாழ்த்தப்பட்டவருக்கான சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அதிகாரி மறுத்துவிட்டாராம். இதற்கு எதிராக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறு வயது முதல் கிறிஸ்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளார். தேவாலய பிரார்த்தனைகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று கிறிஸ்தவத்தை பின்பற்றி உள்ளார் என்பது அரசு தரப்பில் இருந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எனவே சலுகையை பெறுவதற்கான தாழ்த்தப்பட்டவருக்கான சான்றிதழை கோரியது ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செல்வராணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ததுடன், நம்பிக்கையின்றி இடஒதுக்கீடு பலன்களை பெற மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கும் எனக் குறிப்பிட்டு செல்வராணியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+