"லாப நோக்கம்".. வேக்சினுக்கு கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்.. உச்ச நீதிமன்றம் கவலை
டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் வேக்சினில் 25% தனியாருக்கு விற்கப்படும், அவர்கள் அதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் வேக்சின் விற்பது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், மத்திய அரசு தனியாருக்கு 25% வேக்சின் வாங்க அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே சமயம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 25% வேக்சினை தனியார் வாங்கிக்கொள்ளும். தனியார் மருத்துவமனைகளுக்கான வேக்சின் விலையை வேக்சின் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். இந்த வேக்சின் விலையோடு சேர்த்து தனியார் மருத்துவமனைகள் தங்கள் வேக்சின் விற்பனையில் 150 ரூபாய் மட்டுமே சர்வீஸ் சார்ஜ் விதிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேள்வி
தனியார் மருத்துவமனைகள் வேக்சின் விற்பது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த மே 31ம் தேதி இது வேக்சின் கொள்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் தனியார் மருத்துவமனைகள் குறித்து சரமாரி கேள்வி எழுப்பி இருந்தது.

என்ன
அதில் தனியார் மருத்துவமனைகள் வேக்சின் வழங்குவதை விட லாபம் பார்ப்பதில் கவனம் செலுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதை மத்திய அரசு மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். இதற்கான கண்டிப்பாக சட்டங்கள் தேவை. கூடுதல் விலைக்கு வேக்சின் விற்க வாய்ப்புகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் சில லாபங்கள் மட்டுமே நோக்கமாக இருக்கும்.

நோக்கம்
கூடுதல் விலைக்கு தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வேக்சின்களை தனியார் நிறுவனங்கள் மொத்தமாக விற்க வாய்ப்புள்ளது. அதேபோல் இவர்கள் கோவின் தளத்தை பயன்படுத்தாமல், அதிக பணம் கொடுக்கும் நபர்களுக்கு வேக்சின் விற்க வாய்ப்புள்ளது. கிராமங்களில் சிறிய ஊர்களில் வசிக்கும் மக்கள் இதனால் அவதிப்படுவார்கள்.

அரசு
அரசு முகாம்களில் வேக்சின் பெற முடியாதவர்கள், தனியாரிடம் அதிக பணம் கொடுக்க வேண்டிய நிலை வரும். வேக்சின் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கும் தனியார் மருத்துவமனைகள் நாங்கள் குறை சொல்லவில்லை. லாப நோக்கத்தோடு செயல்படும் நிறுவனங்களை பற்றித்தான் பேசுகிறோம். தனியார் மருத்துவமனைகளை மத்திய அரசு எப்படி கண்காணிக்கிறது, எவ்வளவு வேக்சினை அவர்கள் எவ்வளவு விலைக்கு விற்பார்கள் என்பது குறித்த முழு விவரம் அடங்கிய ரிப்போர்ட் தேவை என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கடந்த மே 31ம் தேதி காட்டாது.

பத்திரம்
மத்திய அரசின் வேக்சின் கொள்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்தது. இந்த அவகாசம் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றியது. இந்த நிலையில் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலித்து வேக்சின் விற்கும் முறை அனுமதிக்கப்பட்டுள்ளது கேள்விகளை எழுப்பி உள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications