ஒத்த வரியில் நச்சுன்னு தீர்ப்பு.. முஸ்கின் கொலையாளியைத் தூக்கில் போடுங்க.. சுப்ரீ்ம் கோர்ட் அதிரடி
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
Recommended Video
டெல்லி: கோவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
கடந்த 2010-ல் கோவையில் நடந்த சம்பவம் இது... ரங்கேகவுடர் வீதி, காத்தான் செட்டி வீதியில் வசிப்பவர் ரஞ்சித்குமார். இவருக்கு வயது 40. துணிக்கடை வைத்திருக்கிறார்.
இவரது மகள் முஸ்கின், வயசு 11, மகன் ரித்விக் வயசு 8.. இருவருமே நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களை ஸ்கூலுக்கு அழைத்து செல்ல ஒரு கால் டாக்சி வரும்.

குழந்தைகள்
அந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி காலை வழக்கம்போல் வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டு வாசலில் இருகுழந்தைகளும் காத்திருந்தனர். அப்போது, கால்டாக்சியில் இரண்டு குழந்தைகளையும் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

பலாத்காரம்
பிஏபி கால்வாய் பகுதிக்குக் கொண்டு சென்று சிறுமி முஸ்கினை மிக மோசமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு பிறகு அந்த குழந்தைகள் ரெண்டுபேரையும், அங்குள்ள வாய்க்கால் தண்ணீரில் தள்ளிவிட்டு அமுக்கி கொலையும் செய்தனர். இக்கொலை வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன் 37, மற்றும் இவரது நண்பரான டிராக்டர் டிரைவர் மனோகரன் 23, ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.

என்கவுன்டர்
இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வந்தது. ஒருமுறை விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தப்பி செல்ல முயன்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இப்படி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அப்போது பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

சுப்ரீம் கோர்ட்
இந்த வழக்கில் மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மனோகரன் இந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தூக்கு தண்டனை
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக ஒத்த வரியில் உத்தரவிட்டு நீதியை நிலைநாட்டி உள்ளார். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், நீதிமன்றம் அதனை வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்காது என்பது சுப்ரீம் கோர்ட்டின் இந்த தண்டனை மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications