"இப்படியெல்லாமா எங்களுக்கு கேஸ் வரணும்?".. ரெஹனா வழக்கு விசாரணையின்போது.. நொந்து போன நீதிபதிகள்

ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "இப்படியெல்லாமா எங்களுக்கு கேஸ் வரணும்? ஒரே குழப்பமாக இருக்கு... குழந்தைகளுக்கு அவர் என்ன சொல்ல நினைக்கிறார்? இதெல்லாம் மோசமான ரசனையாக இருக்கிறதே" என்று ரெஹானா பாத்திமா தாக்கல் செய்த முன்ஜாமீன் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நொந்து கொண்டனர்.. அத்துடன் பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவையும் டிஸ்மிஸ் செய்தனர். போய் அவரை குர் ஆன், மனுஸ்மிருதி படிக்க சொல்லுங்க என்று ஏற்கனவே கேரள ஹைகோர்ட் நீதிபதிகள் ஆவேசமாக சொன்ன நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    அரை நிர்வாண உடலில் குழந்தைகளை ஓவியம் வரைய வைத்த Rehana Fathima

    பாத்திமா ரெஹானா.. சமூக செயற்பாட்டாளர்.. ஆனால், சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் இவரது வாழ்க்கையே நகர்கிறது... கடந்த ஜுன் 19ம் தேதி, ஒரு வீடியோ இவர் யூ-டியூப்பில் ஷேர் செய்திருந்தார்.. அதில் அரை நிர்வாண கோலத்தில் பாத்திமா படுத்து கொள்ள, அந்த உடம்பில் அவருடைய மகனும், மகளும் டிராயிங் வரைகிறார்கள்.

    அதற்கு 'பாடி ஆர்ட் பாலிடிக்ஸ்' (#BodyArtPolitics) என்று ஒரு தலைப்பும் போட்டிருந்தார். "தன் அம்மாவின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்.. பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளது" என்று இதற்கு நீண்ட விளக்கமும் தந்திருந்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது.. பத்தனம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் சார்பில் திருவல்லா போலீசில் புகார் தரப்பட்டது.

    ஹைகோர்ட்

    ஹைகோர்ட்

    தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் திருவல்லா போலீசும் வழக்குப்பதிவு செய்தது.. மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் கையில் எடுத்து, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த சமயத்தில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா கேரள ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. அந்த மனு நீதிபதி பிவி உன்னிகிருஷ்ணன் அமர்வு முன்பு கடந்த மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

     குரான், மனுஸ்மிருதி

    குரான், மனுஸ்மிருதி

    அப்போது நீதிபதி உன்னிகிருஷ்ணன் "மனுதாரர் ரெஹானா பாத்திமாவுக்கு வேண்டுமானால் அவரது கொள்கையின்படி.. சித்தாந்தப்படி.. அவரின் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க உரிமை இருக்கு.. ஆனால், அவை எல்லாத்தையும் 4 சுவற்றுக்குள்ளே அவர் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கணும்.. சட்டத்தால் அதைத் தடை செய்ய முயலக்கூடாது.. மனுஸ்மிருதி, புனித குர்ஆன் இப்படி நூல்களை படிக்க பார்க்க சொல்லுங்க.. அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கமா சொல்லப்பட்டிருக்கும்" என்று ஆவேசமாக கூறி அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

     முன் ஜாமீன்

    முன் ஜாமீன்

    இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பாத்திமா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் காவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபால் நாராயணன் வாதாடும்போது, "ரெஹானா பாத்திமா மீது குழந்தைகளை வைத்து பாலியல் படம் எடுக்கும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

     அரை நிர்வாணம்

    அரை நிர்வாணம்

    தனது குழந்தைகளை வைத்து அவர் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்துள்ளார். இந்த நாட்டில் ஒரு ஆண் அரை நிர்வாணமாக நின்றால் அது தப்பில்லை.. ஆனால், ஒரு பெண் அரை நிர்வாணமாக நின்றால் அது குற்றமாகிறது. அதனால் தனிமனிதராக ரெஹானாவைப் பார்க்காமல், அவரின் முன்ஜாமீன் மனுவை பரிசீலிக்க வேண்டும். அந்த குழந்தைகள் டிரஸ் அணிந்துதான் இருந்தார்கள்.., ஆனால், தவறான குற்றச்சாட்டு மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

     குழப்பமா இருக்கு

    குழப்பமா இருக்கு

    இதைக் கேட்ட நீதிபதிகள், "என்ன மாதிரியான வழக்கு எங்க கிட்ட வந்திருக்கிறது? இது சற்று குழப்பாக இருக்கிறது.. மனுதாரர் சமூகச் செயற்பாட்டாளராக இருக்காலம்... அதுக்காக இதுபோன்ற செயல்களை எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாதது. இந்த நாட்டில் உயர்ந்த கலாச்சாரம் குறித்து ரெஹானா பாத்திமா என்ன மாதிரியான தாக்கத்தை தனது குழந்தைகளுக்கு அவரின் உடலில் ஓவியம் வரைய வைப்பதன் மூலம் கற்றுக்கொடுக்க போகிறார்?

    தள்ளுபடி

    தள்ளுபடி

    இது சமூகத்தின் மிக மோசமான ரசனையாக இருக்கிறது... இந்த மனுவின் அனைத்து அம்சங்களையும் ஹைகோர்ட்டே விரிவாக பரிசீலித்துவிட்டது. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+