சிபிஐ, என்ஐஏ, அமலாக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையத்தில் கைதிகள் அடித்து துன்புறுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ஆர் எஃப் நாரிமன் தலைமையிலான நீதிபதிகள் கே எம் ஜோசப், அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில் சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை இயக்குநரகம், போதை தடுப்பு பிரிவு, வருவாய் உளவுத் துறை, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) உள்ளிட்ட விசாரணை அலுவலகங்களில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
இங்கு மட்டுமல்லாமல் எங்கெல்லாம் கைதிகளை அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட முடியுமோ அங்கெல்லாம் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும். அவை நன்றாக தரம் வாய்ந்த கேமராக்களாக இருத்தல் வேண்டும்.
ஜனவரி 27-ஆம் தேதிக்குள் உரிய விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதிலும் அந்த கேமராக்கள் இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
குறிப்பாக ஒவ்வொரு காவல் நிலையங்களின் நுழைவு வாயில், வெளியேறும் வாயில், முக்கிய நுழைவுகள், காத்திருப்பு பகுதி, வரவேற்பறை, சிறைகள் என ஒரு இடம் விடாமல் கேமராக்களை பொருத்த வேண்டும்.
அந்த சிசிடிவி மூலம் ஆடியோ, வீடியோ நன்றாக பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய அரசு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அத்தகைய சிசிடிவி கேமராக்களை வாங்க வேண்டும் என்றும் அதிகபட்சம் ஒரு ஆண்டுக்கு அதில் உள்ள பதிவுகளை எடுக்க வசதி செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications