டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

24 Hour Time.. காற்று மாசை கட்டுப்படுத்த பிளான் எங்கே?.. டெல்லி அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நறுக் கேள்வி

டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய சுப்ரீம்கோர்ட், காற்று மாசை கட்டுப்படுத்துவது குறித்து 24 மணி நேரத்தில் உரிய திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.

இந்தமுறை தீபாவளி பண்டிகை முடிந்ததுமே ஒரு முக்கிய செய்தி வெளியானது.. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியிருந்ததாக கூறப்பட்டது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால், காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகளும் இதையடுத்து கையில் எடுக்கப்பட்டன.

கல்யாண நாள் அதுவுமா.. யார் அந்த 3 பேர்.. 3 நாட்கள் தொடர் நோட்டம்.. கலக்கத்தில் குமரி பெண்கள்கல்யாண நாள் அதுவுமா.. யார் அந்த 3 பேர்.. 3 நாட்கள் தொடர் நோட்டம்.. கலக்கத்தில் குமரி பெண்கள்

 வேளாண் அறுவடை

வேளாண் அறுவடை

அதாவது, வேளாண் அறுவடைக்கு பிறகு, டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. அதனால்தான் டெல்லியில், இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

கண்டனம்

கண்டனம்

காற்று மாசு குறித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடந்து வரும் நிலையில், அதற்கான விசாரணை இன்று மீண்டும் நடந்தது.. அப்போது, டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து சுப்ரீம்கோர்ட் மாநில மற்றும் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது.. காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை என்று சுப்ரீம்கோர்ட் கண்டித்து.

காற்றின் தரம்

காற்றின் தரம்

நீதிபதிகள் அப்போது மேலும் கூறியதாவது: காற்று மாசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் நிலை என்ன? காற்றின் தரம் குறைவதற்கு முக்கிய காரணம் எது என்பதை கண்டறிந்தார்களா? எத்தனை விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன? அரசு நடவடிக்கை எடுத்தது என்றால் ஏன்? மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது? அரசிடம் இருந்து தங்களுக்கு தரவுகள் தேவையில்லை, மாறாக தீர்வுகளே வேண்டும்.. பெரியவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், 3, 4 வயது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை பார்க்க முடிகிறது.. காற்று மாசு அதிகரிக்கும் நிலையில் பள்ளிகளை மட்டும் திறந்தது ஏன்?

எச்சரிக்கை

எச்சரிக்கை

எங்களை உத்தரவுகள் பிறப்பிக்க வைக்க வேண்டாம், எல்லாவற்றையும் நாங்கள் உங்களுக்கு சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா? காற்று மாசை கட்டுப்படுத்த 24 மணி நேரத்திற்குள் அரசு உரிய திட்டத்தை உருவாக்கவில்லை என்றால் சுப்ரீம்கோர்ட் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர். இதனிடையே, நாளை முதல் டெல்லியில் காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
SC raps Centre, Delhi govt over rising air pollution in capital, seeks response in a day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X