Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹரியானா: தனியார்துறையில் 75% இடஒதுக்கீடு- ஹைகோர்ட் தடையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா மாநில அரசின் தனியார்துறையில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மத்திய அரசு, மாநில அரசு கல்வி- வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பொதுவாக பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு அளவுகள் வேறுபட்டவையாகவும் இருக்கின்றன.

SC sets aside HC staying 75% quota for Haryana locals in private jobs

1990களுக்குப் பின்னர் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும் என்பது பல மாநிலங்களில் எழுந்த கோரிக்கை. குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதும் பிரதான கோரிக்கை.

இதனடிப்படையில் ஹரியானா மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி ஹரியானாவில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அச்சட்டம். இந்த சட்டம் கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. அதிகபட்சம் ரூ30,000 வழங்கப்படுகிற பணிகளுக்கு இச்சட்டம் பொருந்தும்.

இச்சட்டத்துக்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹரியானா அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹரியானா மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்தது. மேலும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு பொதுமான விளக்கங்களை தரவில்லை; ஆகையால் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இடஒதுக்கீட்டை பின்பற்றாத நிறுவனங்கள், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் ஹரியானா அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+