மாஜி அமைச்சர் பா.வளர்மதி ’ஹேப்பி’- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் சூமோட்டோ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
2001-2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு வளர்மதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலை உத்தரவை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வைந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கில் பா. வளர்மதி தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி பா.வளர்மதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹரிரிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, பா.வளர்மதியை வழக்கில் இருந்து விடுதலை செய்து 10 ஆண்டுகளாகிவிட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் வழக்கை விசாரணைக்கு எடுப்பது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து பா.வளர்மதி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹரிரிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமலும் ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
தற்போதைய அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை தீர்ப்பையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 'சூமோட்டாவாக' விசாரித்து வருகிறார். அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்க இருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தடை பிற வழக்குகளுக்கும் பொருந்துமா? என்பது திங்கள்கிழமையன்று தெரியவரும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications