Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2021 தேர்தல் வழக்கு! எடப்பாடி பழனிசாமியை போலீஸ் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவர் மீது கூடுதல் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை பதிவு செய்த எதிர்தரப்பினர் மிலானி, தமிழக அரசு ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

edappadi palanisamy supreme court aiadmk

அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படி சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. சேலம் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடந்த நிலையில், புகார்தாரர் மிலானி, எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ தேர்தலில் போட்டியிட்டவரோ இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. மேலும் வேட்புமனுவில் எந்த தகவலையும் தான் மறைக்கவில்லை என்றும் வாதம் முன் வைக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில் சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 22 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பான புகாரில் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்றைய தினம் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி கூறுகையில் எடப்பாடி பழனிசாமி மீது கூடுதல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் எதிர் தரப்பினரான மிலானி, தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+