உள்ளாட்சி தேர்தல்- திமுக, காங்., மனுக்கள் மீது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது.

இடஒதுக்கீட்டுடன் வார்டு மறுவரையறைகள் செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 28 மாவட்டங்களில் இடஒதுக்கீட்டுடன் கூடிய வார்டு மறுவரையறைகள் செய்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

SC to hear plea of DMK, Congress against TN Local Body Election Notification

எஞ்சிய 9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் உடனே வெளியிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றாமல் வார்டு மறுவரையறைகள் செய்யாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் திமுக மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இம்மனுக்கள் மீது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திமுக தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு மிகவும் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+