எஸ்பி வேலுமணி கேஸில் மத்திய அரசு வக்கீல்-தமிழக அரசின் அப்பீல் மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் அவருக்காக மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜராக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தின் அசைக்க முடியாத ஆகப்பெரும் தூணாக இருந்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில் ஊழல் முறைகேடு நடந்தது; இதற்கு எஸ்.பி.வேலுமணிதான் காரணம் என்பது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு.
ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என வாதிடுகிறது எஸ்.பி.வேலுமணி தரப்பு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவில், தமக்கு எதிரான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை வழங்கப்பட்டுவிட்டது; ஆனால் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆதாரம் இல்லை என்ற முதல் கட்ட அறிக்கைக்கு எதிராக அரசு, மனுதாரர்கள் வழக்கும் தொடரவில்லை என தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு வக்கீல் ராஜூ ஆஜர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எஸ்.பி.வேலுமணியின் மனு விசாரணைக்கே ஏற்புடையது அல்ல என வாதிட்டார். அத்துடன் இந்த மனுவை ஒரு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்றார். அத்துடன் எஸ்.பி.வேலுமணி தரப்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராகவும் சண்முகசுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழக அரசு ஆட்சேபனை
இது தொடர்பாக வாதிட்ட தமிழ அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கின்றனர். இந்த சோதனை நடத்திய வருமான வரித்துறைக்காக வழக்குகளில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ராஜூ. அவர் எப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும் என கேள்வி எழுப்பினார். ஆனால் மத்திய அரசின் அனுமதியுடன் தாம் ஆஜராவதாக வழக்கறிஞர் ராஜூ நியாயப்படுத்தி வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ, மத்திய அரசு அனுமதியுடன் ஆஜராகி உள்ளார்; மத்திய அரசின் அந்த அனுமதி திரும்ப பெறப்படவில்லை. ஆகையால் ராஜூ ஆஜராவதை எதிர்க்கும் தமிழக அரசின் ஆட்சேபனை நிராகரிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு மீது செப்டம்பர் 9-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்- இன்று விசாரணை
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராவதை எதிர்த்த தமிழக அரசின் ஆட்சேபணையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!












Click it and Unblock the Notifications