அனில் அம்பானியை நியமித்தது எப்படி.. விசாரிக்கப் போவதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. பெரும் சிக்கல்
Recommended Video

டெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் எப்படி பிரெஞ்சு நிறுவனத்தின் துணை பங்குதாரராக ஆனது என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரபேல் பேர ஊழலுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், அந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்து நாளேட்டில் வெளியான ரபேல் ஆணவங்களை ஆதராமாக ஏற்று விசாரிக்க உள்ளது. திருடப்பட்ட ஆணவங்களை விசாரணைக்கு ஏற்க கூடாது என்ற மத்திய அரசின் வாதங்களையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இதனிடையே இந்த வழக்கை தாக்கல் செய்த மனுதாரர். ரபேல் விமானங்களை உற்பத்தி செய்துதருவதாக கூறிய டசால்ட் நிறுவனம், துணை பங்குதரராக அனில் அம்பானியின் நிறுவனத்தை நியமித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வரும் அன்று முழு தகவலை அளிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக அனில் அம்பானியின் நிறுவனம் பிரெஞ்சு நிறுவனத்தின் துணை பங்குதாரராக நியமிக்க விவகாரம் உள்பட பல்வேறு அம்சங்களை நீதிமன்றம் விசாரிக்கப் போகிறது. இதனால் பல உண்மைகள் நிச்சயம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications