பி.ஆர் கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவம்! வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு! விசாரணை தேதி அறிவிப்பு
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வரும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு அக்.27ம் தேதி நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 6 அன்று உச்சநீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்திற்கு எதிராக கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் அளித்ததாக, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், அக்டோபர் 16 அன்று நீதிபதி காந்தின் அமர்வு முன்பு தெரிவித்தார். இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் இந்த மனுவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் மீண்டும் கவனத்திற்கு வருவதைத் தவிர்ப்பதற்காக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் அமர்வு தயக்கம் காட்டியது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடுவது புத்திசாலித்தனம் என்று அமர்வு குறிப்பிட்டது.
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல வழக்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நேரத்தை இந்த விவகாரத்திற்காக செலவிடுவது சரியா என்றும் அமர்வு கேள்வி எழுப்பியது. ஆனால், இந்த சம்பவம் நிறுவனத்தின் கவுரவத்துடன் தொடர்புடையது என்று சிங் வலியுறுத்தினார்.
தாக்குதல் நடத்தியவர் தனது செயலை நியாயப்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தலைமை நீதிபதி மீதான தாக்குதலை சமூக வலைதளங்களில் சிலர் பெருமைப்படுத்துவது பற்றியும் அவர் கவலை தெரிவித்தார். அத்தகைய பதிவுகளுக்கு எதிராக "ஜான் டோ" உத்தரவும் கோரப்படுகிறது என்று அவர் கூறினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications