ஏப்ரல் 19 லோக்சபா தேர்தல்.. மே 22 வாக்கு எண்ணிக்கையா? தேர்தல் ஆணையம் கொடுத்த பரபர விளக்கம்
டெல்லி: லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் மார்ச் 13 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர இருப்பதாகவும் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இதனை மறுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2- வது வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தயார் நிலை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

இவ்வாறாக தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேர்தல் முன்னேற்பாடுகளை மெற்கொண்டு வருகிறார்கள். லோக்சபா தேர்தல் எப்போது நடத்தப்படும் எத்தனை கட்டங்களாக நடைபெறும்.. தேர்தல் முடிவு என்று வெளியாகும் என்பது குறித்து நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தேர்தல் தேதி எனக் கூறி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வதந்திகளும் கிளப்பி விடப்படுகின்றன.
இந்த நிலையில், லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் மார்ச் 13 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர இருப்பதாகவும் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவியது. தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது போலவே தென்பட்ட இந்த மெசேஜை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்தனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இது குறித்த விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், "தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புகள் செய்தியாளர்கள் சந்திப்பு வழியாகவே வெளியிடப்படும். வாட்ஸ் அப் மெசேஜ் வாயிலாகவோ, வேறு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவோ வெளியிடப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications