கன்ஃபார்ம்டு.. தமிழ்நாட்டில் எஸ்டிபிஐ போட்டி! மக்களவைத் தேர்தலில் 60 இடங்கள்! 27 தொகுதிகளின் லிஸ்ட்
டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 60 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள SDPI கட்சி முதல்கட்டமாக 27 தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
மத்தியில் நடைபெற்று வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இறங்கி இருக்கின்றன. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள், கூட்டணி உடன்படிக்கைகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டு உள்ளது.

இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சி தேசிய அளவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் SDPI கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி 27 தொகுதிகளுக்கான முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஜாங்கிபூர், பெஹ்ராம்பூர், முர்ஷிதாபாத், மால்டா சவுத், ஜாதவ்பூர் மற்றும் கொல்கத்தா வடக்கு மற்றும் தெற்கு (மேற்கு வங்கம்), கெரானா, மேருட், பிஜ்னூர், கைசர்கஞ்ச், அம்ரோஹா மற்றும் லக்னோ (உத்தரப் பிரதேசம்), நந்தியால், நெல்லூர் மற்றும் கர்னுல் (ஆந்திர பிரதேசம்) ஆகிய தொகுதிகள் முதல் பட்டியலில் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் தேவாஸ் மற்றும் போபால் (மத்திய பிரதேசம்), சூரத், பனஸ்கந்தா, அகமதாபாத் மேற்கு மற்றும் கட்ச் (குஜராத்), ஹசாரிபாக் மற்றும் ராஜ்மஹால் (ஜார்கண்ட்), மும்பை தெற்கு மத்திய, அவுரங்காபாத் மற்றும் மாலேகான் (மகாராஷ்டிரா) ஆகிய தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே, லோக்சபா தேர்தலுக்கு அடிமட்ட அளவில் தீவிர ஆயத்தங்களை தங்கள் கட்சி செய்து வருவதாக கூறி இப்பட்டியலை வெளியிட்டார். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலும் தங்கள் கட்சி போட்டியிடும் என்றும், இந்த மாநிலங்களின் தொகுதிகளின் பட்டியல் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தும்பே கூறினார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முன்னணி இஸ்லாமிய கட்சியாக இருந்து வரும் எஸ்டிபிஐ அதிமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளயாகி வருகின்றன. அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு இறுதியான பிறகு எஸ்டிபிஐ தமிழ்நாட்டில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications