பதற்றத்தின் உச்சியில் லடாக்.. 5 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது! புதிய உத்தரவால் மக்கள் அச்சம்
டெல்லி: தனி மாநில அந்தஸ்து கோரிய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தற்போது லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, காஷ்மீர் தனி மாநிலமாகவும், லடாக் பகுதியை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரித்து மத்திய அரசு அறிவித்தது. விரைவில் லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அவ்வப்போது கூறி வந்தாலும், 6 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது.

மாநில அந்தஸ்து மட்டுமல்லாது திரிபுரா, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை போன்று லடாக்கையும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்க்சுக் உட்பட 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தை கலைத்த போலீசார், அவர்களை கைதும் செய்தனர்.
இதனையடுத்து புத்த மதத்தை பிரதிபலிக்கும் அமைப்பும், இஸ்லாம் மதத்தை பிரதிபலிக்கும் அமைப்பும் ஒன்று சேர்ந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாஜக அலுவலகம், அரசு வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். இதனையடுத்த லடாக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பதற்றம் தணிந்துவிட்டது, போராட்டக்காரர்களை ஒடுக்கிவிட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இன்றும் அங்கு அமைதி திரும்பவில்லை.
எனவே, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 5 அல்லது அதற்கு அதிகமானோர் பொது இடங்களில் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, அனுமதியின்றி ஊர்வலம், பேரணி நடத்தவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சரி, அனுமதி பெற்று பேரணி போகலமா? என்று கேட்டால், அனுமதியும் வழங்கப்படாது. அதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்க்சுக் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. தற்போது அவர், ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த போராட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் அடைந்த ஏமாற்றங்கள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் விளைவு என்று ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் உரிமையாக இருந்த ஆர்டிகல் 370 ரத்து செய்யப்பட்டபோது யாரெல்லாம் வரவேற்றார்களோ, அவர்கள்தான் இன்று இந்த போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே மத்திய அரசு தனது தவறை உணர்ந்து, மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications