அமித்ஷாவுக்கு உயர் மட்ட பாதுகாப்பு.. ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ பாதுகாப்பு!
Recommended Video
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, அதோடு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுக்கள் அனைத்திலும் அமித்ஷா இடம் பெற்றுள்ளார். இப்போது மோடியின் அமைச்சரவையில் மோடிக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள நபர் அமித்ஷா என்பதால் அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீசார் அவருக்கான பாதுகாப்பு பணியை செய்து வருகின்றனர். ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் அவருக்கு மேலும் பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளதால் அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள அதே வேளையில் அவர் தற்போது வசித்து வரும் வீட்டில் இருந்து மாற உள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்து வந்த வீட்டில் அமித்ஷா இப்போது குடியேற உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அமித்ஷா வீடு மாற உள்ளார் என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர். அந்த வீட்டில் டெல்லி போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த கருப்பு பூனை படையும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு இம்முறை பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அவரது வீட்டுக்கு ராணுவம் வரும் வரை டெல்லிப் போலீசார் அவரது பாதுகாப்பு பணியில் தொடருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications