900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஜனநாயக பாரம்பரியம்..புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் செங்கோல் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இதில் அவர் கூறியதாவது:- புதிய நாடாளுமன்ற வளாகம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும். புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் நாட்டின் மக்கள் சக்தியை வெளிப்படுத்துகிறோம் நாட்டின் மக்களாட்சி மகத்துவத்தை உலகம் பார்க்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில்தான் உலக நாடுகளின் முன்னேற்றம் இருக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடமானது இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது இந்தியா புதிய பயணத்தை இன்று தொடங்கி உள்ளது நாடாளுமன்றத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது நேர்மை, நீதிக்கு ஒரு அடையாளமாக செங்கோல் திகழ்ந்தது ஆதீனம், ராஜாஜி ஒருங்கிணைப்பால் செங்கோல் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டு ஆதீனங்களின் மடாதிபதிகள் ஆசீர்வாதம் வழங்கினர்..
ஆதீனங்களின் மடாதிபதிகளை வணங்குகிறோம். தமிழ்நாட்டின் செங்கோல் நாம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அமிர்த காலத்திற்குள் இந்தியா நுழைந்துள்ளது. செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரம் மாற்றத்திற்கான அடையாளம் செங்கோல்.
ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரப்பகிர்வுக்கு அளிக்கபப்ட்ட செங்கோலுக்கு உரிய முக்கியத்துவம் அளித்துள்ளோம். புனித செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அதிகார மாற்றத்திற்கான அடையாளம் செங்கோல். இந்தியாவை உலக நாடுகள் இன்று நன்மதிப்போடு பார்க்கின்றன. இவ்வாறு மோடி கூறினார்.
பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகையில், "புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புதிய இந்தியாவின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்தின் சாட்சியாக இது திகழ்கிறது. இது வெறும் கட்டிடம் அல்ல. 140 கோடி மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் உள்ளடக்கியது. இந்தியா அசைக்க முடியாத உறுதியைக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை இது உலகிற்குக் கொடுக்கிறது.

இந்தியா முன்னேறும்போது, புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் புதிய இந்தியாவின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. இது வெறும் கட்டிடம் இல்லை. 140 கோடி மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்தியா அசைக்க முடியாத உறுதியை கொண்டுள்ளது என்ற செய்தியை உலகத்திற்கு காட்டுகிறது.
இந்தியா முன்னேற்றம் அடையும் போது புதிய நாடாளுமன்ற கட்டிடமும் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும். சோழ சாம்ராஜ்யத்தில் கடமை, சேவை, தேசத்தின் பாதையாக செங்கோல் கருதப்பட்டது. நமது ஜனநாயகமே நமக்கு உத்வேகம் அளிக்கும் சக்தியாக உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் பழையதும் புதியதும் இணைந்து வாழ்ந்தற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
வளர்ச்சியை நோக்கிய நமது பயணத்திற்கான சாட்சியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும். ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளது. உலக ஜனநாயகத்திற்கான அடித்தளமாகவும் இந்தியா உள்ளது. ஜனநாயகம் தான் நமது தத்துவம், சிந்தனை, பாரம்பரியம். பல ஆண்டுகளாக நமது பெருமையை அன்னிய ஆட்சி அபகரித்தது. ஆனல் இன்று காலனித்துவ மனப்பான்மையை விட்டு இந்தியா நீங்கியுள்ளது" என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications