Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர் வந்து நின்றால் அறையே கிடுகிடுக்கும்.. கிரிமினல் வழக்கின் கிங்.. விடைபெற்றார் ராம் ஜெத்மலானி!

பல்வேறு முக்கிய கிரிமினல் வழக்குகள், மோசடி வழக்குகளில் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தவர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Ram Jethmalani மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்

    டெல்லி: பல்வேறு முக்கிய கிரிமினல் வழக்குகள், மோசடி வழக்குகளில் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தவர். அவருடைய கடைசி வழக்கு வரை அவரின் வாதங்கள் இந்தியா முழுக்க கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் பிறந்தார். அதன்பின் இந்தியா - பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார்.

    17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். இவர் கிரினிமல் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார்.

    குடும்பம் எப்படி

    குடும்பம் எப்படி

    இவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ராணி ஜெத்மலானி, மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் முக்கிய வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இவர் கிரிமினல் வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு முக்கிய கிரினிமல் வழக்குகளில் இவர் ஆஜர் ஆகி உள்ளார்.

    முக்கிய வழக்குகள்

    முக்கிய வழக்குகள்

    இவர் ஆஜர் ஆன 90% சதவிகித வழக்குகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவை. சில வழக்குகள் பெரிய சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் காலப்போக்கில் இவர் அரசியல் சார்ந்த வழக்குகளில் இவர் ஆஜர் ஆனார். அதன்பின் சொத்து குவிப்பு வழக்கு போன்ற வழக்குகளிலும் ஆஜர் ஆனார்.

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    ராம் ஜெத்மலானி பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்தவர். முக்கிய வழக்குகள் பலவற்றில் இவர் ஆஜராகி வாதம் செய்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 7 தமிழர்களுக்காக இவர் 2011ல் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர் ஆனார்.

    2ஜி வழக்கு

    2ஜி வழக்கு

    பாஜக மூத்த உறுப்பினர் அத்வானியின் ஹவாலா வழக்கு, 2 ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்காக ஆஜர் ஆனார்.ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, எடியூரப்பா பண மோசடி வழக்கு, ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஆகிய வழக்குகளில் இவர் ஆஜர் ஆகி இருக்கிறார்.

    ஜெயலலிதா வழக்கு

    ஜெயலலிதா வழக்கு

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம். ஜெயலலிதாவை ஆரம்ப காலத்தில் இவர் தீவிரமாக எதிர்த்து வந்தவர். ஆனால் கடைசியில் அவருக்காகவே ஆஜர் ஆகி கர்நாடகாவில் வாதம் செய்தார்.

    எப்படி

    எப்படி

    அவர் கடைசியாக வாதம் செய்த வழக்குகளில் இது மிக முக்கியமான ஒரு வழக்காக பார்க்கப்பட்டது. பல இளம் வழக்கறிஞர்களுக்கு இவரின் வாதங்கள் பெரிய பாடமாக இருந்துள்ளது. இவர் வந்து நின்றாலே கோர்ட் அறையே ஆடும் அளவிற்கு இவர் புகழ்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓய்வு பெற்றார்

    ஓய்வு பெற்றார்

    இந்த நிலையில் கடந்த 2017ல் இவர் வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இவரின் அரசியல் வாழ்க்கை மிக மிக வினோதமானது. பாஜகவில் சேர்வதும், பின் பாஜகவை எதிர்ப்பதும், பாஜகவினருக்கு எதிரான வழக்குகளில் ஆஜர் ஆவதையும் இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.அதன்பின் 2004ல் இவர் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்து நின்று போட்டியிட்டார். ஆனால் மீண்டும் 2010ல் இவர் பாஜகவில் சேர்ந்தார்.

    ராஜ்ய சபா எப்படி

    ராஜ்ய சபா எப்படி

    அதன்பின் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். இதனால் இவர் அரசியல் கொள்கைகள் விமர்சனம் செய்யப்பட்டது. அதன்பின் கொஞ்சமா கொஞ்சமாக இவர் அரசியலில் இருந்து தன்னை விலகிக் கொண்டார். அதே போல் அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டில் இருந்தும் ஓய்வு பெற்று வீட்டில் நாட்களை கழித்துக் கொண்டார். இன்னும் 6 நாட்களில் இவருக்கு பிறந்த நாள் வர உள்ள நிலையில் நிலையில் இன்று காலை வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+