வெளிநாடு போன ராகுல் காந்தி.. மீட்டிங்கில் 'பஞ்சாயத்தா' ஏதாவது பேசனுமே...பாஜக ரொம்பவே வெயிட்டிங்!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு செல்லும் போது மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சிப்பார்; இம்முறையும் அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலடி தருவதற்கு பாஜக இப்போதே தயாராக இருக்கிறதாம்.
ராகுல் காந்தி ஒரு வார பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். நாளை மறுநாள் பாரீசில் மாணவர்களிடையே ராகுல் காந்தி உரையாற்ற இருக்கிறார். மேலும் பிரான்ஸ் தொழிலாளர் சங்கங்களிடையேயும் ராகுல் பேச உள்ளார். பின் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார். இந்த பயணங்களை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 11-ல் நாடு திரும்புகிறார் ராகுல்.

அதே காலகட்டத்தில் டெல்லியில் செப்டம்பர் 9,10-ல் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு இந்தியா தற்போது தலைமை வகிக்கிறது.
ராகுல் காந்தி வெளிநாடு பயணங்களில் மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சிப்பது வழக்கம். அத்தகைய விமர்சனங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்வது பாஜகவின் பாணி. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்.பிக்கள் அமளியிலும் ஈடுபட்டதும் உண்டு.
தற்போதும் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பேச்சுக்காக பாஜக தலைவர்கள் பதிலடி தர ஆவலுடன் உள்ளனராம்.












Click it and Unblock the Notifications